சன் டிவியில் ஒவ்வொரு வாரமும், TRP-யில் கெத்து காட்டி கொண்டிருக்கும் தொடர் 'சிங்கப்பெண்ணே'. கடந்த இரண்டு வருடமாக ஓடி கொண்டிருக்கும் இந்த தொடர், முழுக்க முழுக்க, ஆனந்தி என்கிற ஹீரோயினை மையமாக வைத்து தான் நகர்ந்து வருகிறது.
ஆனந்தியை, அழகன் என்கிற பெயரின் காதலித்தது அன்பு தான் என்பது ஆனந்திக்கு தெரியவர... ஆனந்தியும் அன்புவை ஏற்று கொள்கிறாள். அன்புவின் அம்மா ஆனந்தி - அன்பு காதலுக்கு தடையாக இருந்த நிலையில், தற்போது அந்த தடையும் நீங்கி உள்ளது. ஆனந்தி, அன்புவை திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பது போல், மகேஷும் ஆனந்தியை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.