ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியல் தற்போது ரேவதியின் திருமணத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
நேற்றைய தினம் 'கார்த்திகை தீபம்' சீரியலில் நேற்று சாமுண்டீஸ்வரி அபிராமியை பார்த்து ரேவதியின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்த நிலையில், பின்னர் ஆசரியிடம் ரேவதியின் திருமணத்திற்கு தாலி செய்ய தங்கத்தை கொடுத்த நிலையில், மயில் வாகனம் பாட்டி கொடுத்த தாலியை மாற்றி வைக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
25
Samundeeshwari Friend Gifted Dimond Necklace
ஆசாரி ரேவதிக்கு தாலி செய்து செய்து முடித்த பின்னர், சாமுண்டீஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பணக்கார ப்ரண்ட் ஒருவர் அவரை பார்க்க வீட்டுக்கு வருகை தருகிறார். உன்னோட மகள் திருமணத்திற்கு என்னால் வரமுடியாது, அதனால் தான் இப்போதே வாழ்த்து சொல்ல வந்தேன் என கூறி தன்னுடைய திருமண பரிசாக ரேவதிக்கு வைர நெக்லஸ் ஒன்றை கொடுக்கிறார்.
இந்த வைர நெக்லஸை பார்த்ததும், அதையே உற்று பார்க்கும் மாயா வாய் பிளக்கிறாள். மகேஷ் பக்கத்தில் சென்று அந்த வைர நெக்லஸ் தனக்கு வேண்டும் என்பது போல் பேச, இதை கார்த்திக் நோட் பண்ணுகிறான். கவனிக்கிறான். உடனே நகையை எடுத்து மறைத்து வைத்து விடுகிறான் கார்த்தி.
45
Revathy Angry Speech
பின்னர் வீட்டில் நகையை காணவில்லை என்று அனைவரும் சொல்ல, ஆசைப்பட்ட நகை இப்படி அணியாகமாக காணாமல் போய் விட்டதே என, மாயா கடுப்பாகிறாள். அந்த கோபத்தில், ரேவதியிடம் உன்னால் ஒரு நகையை கூட பத்திரமா பார்த்துக்க முடியாதா? என்று சத்தம் போடுகிறாள்.
மாயாவின் வார்த்தைகளால் பொறுமை இழந்த ரேவதி, கடுப்பாகி என்ன அந்த நகையை பத்தியே பேசிட்டு இருக்கீங்க. நகை தான் முக்கியமா? இந்த கல்யாணம் நல்லபடியுமா நடக்கணும்னு யோசிக்க மாட்டிங்களா? திட்ட. மாயா நல்லா வாங்கி கட்டிக்கொண்டு அமைதி ஆகிறாள். பின்னர் நகையும் கிடைத்து விடுகிறது.
பின்னர் சாமுண்டீஸ்வரி, மாயாவை பார்த்து நகைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கொஞ்சம் மனுஷங்களுக்கும் கொடுங்க. நாளைக்கு கல்யாண வரவேற்பு இருக்கு.. வந்துடுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? திருமணத்தில் நடக்க போவது என்ன என்கிற எதிர்பாராத திருப்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள, கார்த்திகை தீபம் தொடரை தொடர்ந்து பாருங்கள்.