Published : Feb 20, 2025, 04:34 PM ISTUpdated : Feb 20, 2025, 04:35 PM IST
மீனாவின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்த விஷயம் தெரிந்து மீனா அழுததை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் கலங்கி போன நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவின் அப்பாவுக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு என்று தன்னுடைய அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார் மீனா. அதன் பிறகு அம்மாவை பார்த்து என்னம்மா, என்ன ஆச்சு என்று கேட்க, அதற்குள் மருத்துவரும் சிகிச்சையை முடித்துவிட்டு வந்து விடுகிறார். அப்போது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. இருந்தாலும் இன்னும் சில நாள் டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கிறது. ஹார்ட்டுல பிளாக் இருக்கா என்று டெஸ்ட் எடுத்து பார்த்தால் தான் தெரியும். இதை ஒரு வார்னிங்கா எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
26
Thangamayil
இதை தொடர்ந்து, தங்கமயில் வேலைக்கு புறப்படு, நான் உன்னை கொண்டு ஆபிஸில் விட்டுட்டு வருகிறேன் என்று சரவணன் சொல்கிறார். அதற்க்கு வழக்கம் போல தங்கமயில் பல காரங்கள் சொல்லி தவிர்க்கிறார்.
இதைத் தொடர்ந்து குமரவேல் மற்றும் அரசி லவ் டிராக் தொடங்கிவிட்டது. அரசியை பார்த்து நான் காலேஜில் கொண்டு வந்து விடவா என்று குமரவேல் கேட்கவே, அதற்கு வேண்டாம் வேண்டாம் பாய் சொல்லிவிட்டு அரசி புறப்பட்டு செல்கிறார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த சுகன்யா, நேரடியாக குமரவேலுவிடம் வந்து என்ன குமாரு என்ன லவ் டிராக்கா, சிக்னல் கொடுக்குற என்று சுகன்யா கேட்க, இல்லை இல்லை என்று சொல்ல, சக்திவேலுவும் திட்டுவது போன்று ஆக்ஷன் காட்டவே, இருக்கட்டும் இருக்கட்டும்.
46
Sukanya Vengeance
என்ன ராஜியும், கதிரும் லவ் பண்ணி கல்யாணம் செய்ததால், பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க இப்போது அரசியை குமரவேல் காதலிக்கிறார். நீங்க பண்ணுறது எல்லாம் நியாயம் தான். அதனால் உங்களைப் பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன். அரசியை பார்த்து பேச வேண்டுமானால் வெளியில் பார்த்து பேசு என்று பாண்டியன் குடும்பத்தில் இருந்து கொண்டே சகுனி வேலை செய்கிறார்.
இதை தெடர்ந்து மீனாவிடம் அவரின் அப்பா உடல்நிலை குறித்து டாக்டர் பேசுகிறார். எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு, முதலில் சொன்ன மாதிரி தான், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், இதயத்திற்கு செல்ல கூடிய ரத்தநாளத்தில் பிளாக் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பலூன் மாதிரி ஒன்றை ரத்த குழாய்க்குள் அனுப்பி பிளாக்கை சரி செய்து விடலாம் என சொல்கிறார்.
66
Pandian Stores 2 episode
மத்தபடி பெரியளவில் எதுவும் இல்லை. 2 மணி நேரத்திலேயே பிளாக்கை சரி செய்துவிடலாம் என்று சொல்கிறார்.இதையடுத்து மீனா தனது அப்பாவை பார்த்து அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிட்டு செல்கிறார். அதே மாதிரி அவரை சந்தித்து அவரிடம் சொல்றாங்க. டாக்டர் என்ன சொல்றாரோ அதன்படியே பண்ணிக்கலாம் என்று மீனாவின் அப்பா அஞ்சியோவிற்கு ஓகே சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோடும் முடிவடைகிறது.