பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Mar 23, 2026, 10:02 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் ஆட்களிடம் இருந்து தப்பித்து வரும்போது ஜனனி தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தியும் கொடைக்கானலில் ஆலிவர் ஆட்கள் தங்களை துரத்தி வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு பாட்டி வீட்டில் தஞ்சம் அடைந்திருந்தார்கள். அவர்கள் அங்கு தேடி வந்தபோது கூட அந்த பாட்டியே அவர்களை துரத்திவிட்டார். இதனால் அந்த ரெளடிகள் தொல்லை இனி இருக்காது என நினைத்து, ஜனனியும் சக்தியும் கிளம்பிச் செல்கிறார்கள். ஆனால் செல்லும் வழியில் அவர்களின் காரை ரெளடிகள் பார்த்துவிடுகிறார். அப்போது அவர்கள் மீண்டும் சேஸ் பண்ணி செல்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
எஸ்கேப் ஆன சக்தி - ஜனனி

சக்தி காரில் அதிவேகமாக வந்தபோது திடீரென பிரேக் போட்டதால், ஜனனி காரில் முட்டி, அவருக்கு தலைசுற்றியது. சிறிது நேரத்தில் ஜனனி மயக்கம் போட்டுவிட்டார். இதையடுத்து அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்த சக்தி, தேவசகாயத்தின் ஆட்கள் கண்ணில் படாதவாறு தப்பித்து சென்றுவிடுகிறார். இதையடுத்து அவர் கொடைக்கானலில் இருந்து நேராக மதுரைக்கு வண்டியை விடுகிறார். மயங்கிய நிலையில் இருக்கும் ஜனனியை நேராக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார். ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தான் ஜனனியை சேர்க்கிறார்.

35
மயக்க நிலையில் ஜனனி

ஜனனியை காரில் இருந்து தூக்கி ஸ்ட்ரெட்சரில் வைத்து சக்தி உள்ளே அழைத்துச் செல்லும் போது மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் ரேணுகா மற்றும் நந்தினி பார்த்துவிடுகிறார்கள். அவர்கள் அய்யய்யோ சக்தி, ஜனனிக்கு என்ன ஆச்சு என பதறியடித்து ஓடி வருகிறார்கள். பின்னர் மருத்துவர்கள் ஜனனியை உள்ளே சிகிச்சைக்காக அழைத்து சென்றுவிடுகிறார்கள். அப்போது தான் கொடைக்கானலில் நடந்த கூத்தை எல்லாம் சொல்கிறார் சக்தி. இதைக்கேட்டு பதறிப்போன நந்தினி மற்றும் ரேணுகா, எப்படியோ நீங்க ரெண்டு பேரும் தப்பிச்சு வந்துட்டீங்க என கூறி நிம்மதி அடைகிறார்.

45
தர்ஷன் எடுத்த முடிவு

மறுபுறம் வீட்டில் உள்ள விசாலாட்சி, தன்னுடைய மகன்கள் கதிர் மற்றும் ஞானத்திடம், இந்த வீட்டு பொம்பளைங்க நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க, இனி அவங்கள நோகடிக்காதீங்க என சொல்லி அவர்களிடம் சென்டிமெண்டாக பேசுகிறார். மறுபுறம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தர்ஷன், அம்மா வந்ததும் கோர்ட்டுக்கு அழைத்து சென்று நடந்ததையெல்லாம் கூறி அப்பாவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும் என சொல்கிறார். அதற்கு பதிலளித்த ரேணுகா, முதலில் உங்க அம்மா எழுந்து வரட்டும், அதன்பின் என்னவேணா செய்யலாம் என சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.

55
அடுத்து நடக்கப்போவது என்ன?

இதையடுத்து என்ன ஆனது? வீட்டில் இருந்து பொய் சொல்லிவிட்டு பெண்கள் ஹாஸ்பிட்டல் சென்றதை ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் கண்டுபிடித்தார்களா இல்லையா? ஜனனிக்கு என்ன ஆச்சு? இதனால் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதா? ஈஸ்வரி கண்விழித்தாரா? இல்லையா? ஆதி குணசேகரனுக்கு எதிரான கேஸ் வாபஸ் பெறப்பட்டதா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories