எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் வீட்டிற்கு போலீஸ் உடன் சென்றுள்ள ஜனனிக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, மதிவதினி இருவரும் தேவசகாயத்திடம் இருந்து தப்பித்து வெளியே வந்துள்ளனர். அதேபோல் ஜனனி அமுதாவை கொல்லவில்லை என்பதற்கான ஆதாரத்தையும், சக்தி கொடுத்துள்ளதால், ஜனனி மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தேவசகாயத்திடம் இருந்து தப்பித்த ஜனனி மற்றும் மதிவதினியை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தேவசகாயத்தை போலீசிடம் பிடித்துக் கொடுக்க முடிவெடுத்த ஜனனி அந்த பங்களாவிற்கு போலீஸ் உடன் செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி
தேவசகாயத்தின் பங்களாவுக்கு சென்ற பின்னர் தான் ஜனனிக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு முதியவர் இருக்கிறார். அவர் தான் ஓய்வுபெற்ற பாதுகாப்புப்படை வீரர் என கூறுகிறார். பின்னர் வீட்டின் உள்ளே போய் பார்த்தபோது எல்லாமே டோட்டலாக மாறி இருக்கிறது. தேவசகாயம் இருக்கும் போது வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் யேசுவின் போட்டோ இருக்கும். ஆனால் தற்போது இந்துக் கடவுகளின் போட்டோக்கள் தான் நிரம்பி இருக்கின்றன. இதையடுத்து தன்னை அடைத்து வைத்திருந்த ரூமுக்கு சென்று பார்க்கிறார் ஜனனி. அங்கும் அவருக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
35
தப்பித்த தேவசகாயம்
பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள அவுட் ஹவுஸிற்கு போலீசை அழைத்து செல்கிறார். அங்கும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. இதனால் ஜனனி மற்றும் மதிவதினி இருவருமே கன்பியூஸ் ஆகி இருக்கிறார்கள். உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்த தேவசகாயத்தை எப்படியாவது போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஐடியாவில் அந்த பங்களாவுக்கு வந்த ஜனனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கிருந்து ஜனனி மற்றும் மதிவதினியை போலீசார் பத்திரமாக அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
பின்னர் அறையில் இருவரும் ஆலோசிக்கும் போது ஜனனி, இதுக்குப் பின்னாடி நிறைய கேம் இருக்கு என சொல்லும் மதிவதினி, குணசேகரனை தாண்டி இதில் வேறு யாருடைய தொடர்போ இருக்கிறது என சொல்கிறார். அநேகமாக மதிவதினியின் கணவர் ராணா தான் இந்த வேலையை செய்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மதிவதினி அவரை பிரிந்துவிட்டார். அவர் மீது இருந்த கோபத்தில் அவரை கடத்தி வர வைத்து, அவரை கொல்ல பிளான் போட்டிருக்கக் கூடும். அதே நேரத்தில் ஜனனியும் மதிவதினியின் தோழி என்பதால் அவரையும் இந்த சிக்கலில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
55
ஆதி குணசேகரனின் உள்குத்து
மறுபுறம் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் மண்டையை கழுவி இராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுக்க சம்மதம் வாங்கி இருக்கிறார் ஆதி குணசேகரன். அவரின் இந்த பிளானிலும் ஏதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது. பெண்கள் அனைவரையும் இராமேஸ்வரம் அழைத்து சென்று, அங்கு தான் ஏற்கனவே ராணா அம்மாவின் கதையை முடித்ததை போல், இந்த பெண்களையும் தீர்த்துக்கட்ட குணசேகரன் பிளான் போட்டிருக்கிறாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது? ஆதி குணசேகரனின் பிளான் என்ன என்பது இனி வரும் எபிசோடில் தெரியவரும்.