அய்யனார் துணை சீரியலில் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சோழன் நிலாவுடன் சேர்ந்து தன்னுடைய பெரியப்பாவை கடத்தி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நடேசன் வீட்டில் சில சில்லரை வேலைகளை பார்த்த நிலையில், அங்கு வந்த நடேசனின் அண்ணன், வீட்டின் மீது கேஸ் நடப்பதால் அங்கு எந்த வேலைகளையும் பார்க்கக் கூடாது என சொல்ல, அதை நடேசன் கேட்காததால் போலீசை அழைத்து வந்து வீட்டுக்கே சீல் வைத்திருக்கிறார் நடேசனின் அண்ணன். இதனால் வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு வந்த நடேசனின் குடும்பத்தினர், தற்போது ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வீட்டை மீட்க பல்வேறு பிளான் போட்டிருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
உயிலை எடுக்க பிளான் போடும் நிலா
வீட்டின் உயில் கிடைத்துவிட்டால் வீட்டை மீட்டு விடலாம் என்பதால் சோழனும், நிலாவும் உயிலைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உயிலை எப்படி கண்டுபிடிப்பது, முதலில் அந்த உயில் எங்கு இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் என நிலா கூறுகிறார். ஏனெனில் நடேசனில் நிலாவிடம் பேசுகையில், என் தங்கச்சி இருக்கும் வீடு அவளுக்கும், வீட்டை சுத்தி இருக்கும் இடம் என்னோட அண்ணனுக்கும், இந்த வீடும், வீட்டின் பக்கத்தில் இருக்கும் இடம் எனக்கு சொந்தமானது என என்னுடைய அப்பா உயில் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நடேசன் நிலாவிடம் தெளிவாக கூறியிருந்தார்.
35
பிரச்சனை பண்ணும் நடேசன்
அவர் உயில் எழுதி வைத்திருந்தாலும் அது இப்போ எங்க இருக்கு என்பது தான் தெரியவில்லை. ஒருவேளை அந்த உயில் உங்க பெரியப்பாகிட்ட இருக்குமோ என நிலா சந்தேகப்படுகிறார். அவரிடம் கேட்டால் தான் தெரியும். ஆனால் உங்க பெரியப்பா கிட்ட நேரடியா போய் கேட்டால், கண்டிப்பா சொல்ல மாட்டாரு, அதனால் என்ன செய்வது என்று ஆலோசனை நடத்துகிறார். அதே நேரத்தில் நடேசன் நேராக வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் சீலை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால் அதை சேரன் தடுக்கிறார். அந்த நேரத்தில் சேரனின் அத்தையும் அங்கு வந்து நடேசனிடம் பிரச்சனை பண்ணுகிறார்.
பெரியப்பா மூலம் உண்மையை வாங்கலாம் என பிளான் போடும் நிலா, பல்லவனையும், பாண்டியனையும் வர வைத்து அவர்களை வைத்து ஒரு டிராமா போடுகிறார். உயில் எங்க இருக்கு என்பதை தெரிந்துகொள்வதற்காக பாண்டியனையும், பல்லவனையும் முகமூடி அணிந்து சென்று பெரியப்பாவை கடத்த சொல்கிறார். அவர்களும் அவரை கடத்திச் சென்று ஒரு இடத்தில் வைத்து அவரை அடித்து, உனக்கு எங்கெல்லாம் சொத்து இருக்குனு சொல்லு என விசாரிக்கிறார். அந்த சொத்து பத்திரத்தை கொடு என அவர்கள் கேட்க, அதற்கு அவர் அந்த பத்திரம் என் தம்பிகிட்ட தான் இருக்கு என சொல்கிறார்.
55
உயில் பற்றி நிலாவுக்கு கிடைத்த அப்டேட்
ஒருவழியாக நிலா போட்ட பிளான் சக்சஸ் ஆகி பத்திரம் நடேசனிடம் தான் இருக்கிறது என்பது தெரியவருகிறது. இதனால் நிலாவும், சோழனும் போய் பெரியப்பாவை முகமூடி கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அவரும் நல்ல வேளை என்னை காப்பாத்துனீங்க இல்லேனா என்னைய ஏதாவது செஞ்சிருப்பாங்க என கூறுகிறார். இதையடுத்து நிலாவும், சோழனும் தங்கள் வீட்டுக்குள் இருக்கும் பத்திரத்தை மீட்க கிளம்புகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? நிலாவும் சோழனும் உயிலை எடுத்து, வெற்றிகரமாக வீட்டை மீட்டார்களா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.