பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேறி கோபத்தில் கிணற்றில் விழுந்து சாகும் முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் உடனான விவாகரத்து வழக்கில் தங்கமயில் தனக்கு விவாகரத்து வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிடுகிறார். அதுமட்டுமின்றி சரவணனின் குடும்பத்தார் தன்னை டார்ச்சர் பண்ணுவதாகவும் ஒரு பிட்டை போடுகிறார். இதனால் கன்பியூஸ் ஆன நீதிபதி, இந்த விவாகரத்து வழக்கை ஒத்திவைக்கிறார். கோர்ட் முடிந்து வெளியே வந்து தங்கமயில் அழுது டிராமா போடுகிறார். ஆனால் அதற்கெல்லாம் சரவணன் செவி சாய்க்கவில்லை. கோமதியுடம் தங்கமயிலை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
வீட்டை விட்டு வெளியேறும் தங்கமயில்
தங்கமயிலின் அம்மா பாக்கியம், மகளை கண்டபடி திட்டுகிறார். நீ துப்புகெட்டவ, உனக்கு அறிவே இல்லை. எப்படியாச்சும் பேசி, கெஞ்சி கூத்தாடி அவங்களோட போக சொல்லி தான உன்னைய சொன்னேன். நீ நான் சொல்றது எதையும் கேட்காம, அங்க வந்து நான் சொல்லாததையெல்லாம் எதுக்கு சொன்ன, அவங்க கொடுமைப்படுத்துனாங்கனு எதுக்கு சொன்ன என தங்கமயிலை, லெஃப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்குகிறார் பாக்கியம். இதுக்கப்புறம் நீ வீட்லயே இருக்க கூடாது. எங்கயாச்சும் போய் செத்துத் தொலனு சொல்லிவிடுகிறார் பாக்கியம். இதனால் கோபமடைந்த தங்கமயில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
35
திட்டி அனுப்பிய சரவணன்
பாண்டியனும் சரவணனும் கடையில் இருக்கிறார்கள். அப்போது சரவணனிடம் ஒரு லிஸ்டை கொடுக்கும் பாண்டியன், அதை போட்டு வை நான் போயிட்டு வர்றேன் என சொல்கிறார். அந்த நேரத்தில் தங்கமயில் கடைக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் சரவணன் டென்ஷன் ஆகிறார். அப்போது சரவணனிடம் பேசும் தங்கமயில், மாமா என்னைய போகமட்டும் சொல்லிடாதீங்க. நான் கடைசியா உங்ககிட்ட பேசிட்டு மட்டும் போயிடுறேன்னு கெஞ்சுகிறார். ஆனால் சரவணன் அவர் சொல்ல வந்ததை காதுகொடுத்து கேட்க தயாராக இல்லை. நீ எதுவாக இருந்தாலும் கோர்ட்ல வந்து பேசுனு சொல்லி விரட்டுகிறார்.
தங்கமயில் கடையில் இருந்து அழுதுகொண்டே வெளியே வரும்போது, சரவணனின் முன்னாள் காதலி அஞ்சலி கடைக்கு வருகிறார். அஞ்சலிக்கு அந்த பெண் யார் என்பதெல்லாம் தெரியாது. அவர் சரவணனிடம் யார் அது என விசாரிக்கிறார். அதற்கு சரவணன், அது என்னுடைய பொண்டாட்டி தான் என சொல்கிறார். கொஞ்சம் சண்டை அதுனால தான் அழுதுட்டு போறா என கூறுகிறார். மேற்கொண்டு தாங்கள் இருவரும் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கும் விஷயங்களை அஞ்சலியிடம் சொல்லாமல் மூடி மறைக்கிறார் சரவணன். பின்னர் கடைக்கு ஆட்கள் வந்ததால், நான் போனில் பேசுகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார் அஞ்சலி.
55
தங்கமயிலை காப்பாற்றிய மீனா
சரவணன் திட்டிய சோகத்தில் இருந்த தங்கமயில், ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து செல்கிறார். அந்த வழியாக ஆட்டோவில் வந்த மீனா, இவ எதுக்கு இப்படி தனியா நடந்து போறா என சந்தேகப்பட்டு, தங்கமயிலை பாலோ பண்ணுகிறார். அப்போது அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல, சரியான நேரத்தில் வந்து மீனா அவரை காப்பாற்றிவிடுகிறார். அதன்பின்னர் என்ன ஆச்சு என விசாரிக்கிறார். அதற்கு தங்கமயில், வீட்டுலையும் என்னை சேர்த்துக்க மாட்றாங்க இங்கையும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க. எனக்கு தெரிஞ்சதே புகுந்த வீடும், பொறந்த வீடும் தான். இரண்டு வீட்லையும் என்னைய வெளிய அனுப்புனா நான் எங்க போவேன் என் புலம்புகிறார் தங்கமயில். இதையடுத்து மீனா தங்கமயிலை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.