ஈஸ்வரி மீது திடீர் பாசம்; குணசேகரனிடம் செம டோஸ் வாங்கிய விசாலாட்சி! எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Aug 06, 2025, 10:50 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் ஈஸ்வரியை பார்க்க அனுமதி கேட்கும் விசாலாட்சிக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார் ஆதி குணசேகரன்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Today Episode

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தாக்கியதில் காயமடைந்த ஈஸ்வரி, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக டாக்டர் கூறியதால் குடும்பத்தார் பதற்றம் அடைந்தனர். அவருக்கு நினைவு திரும்ப சில நாட்களும் ஆகலாம் இல்லையென்றால் சில மாதங்களும் ஆகலாம் என டாக்டர் கூறியதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். ஈஸ்வரிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறியதை அடுத்து அதற்கான பண ஏற்பாடுகளை ஜனனி செய்து வருகிறார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

24
ஈஸ்வரியை பார்க்க ஆசைப்படும் விசாலாட்சி

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் ஈஸ்வரியை பார்க்க தான் செல்ல இருப்பதாக விசாலாட்சி சொல்கிறார். இதைக்கேட்ட ஆதி குணசேகரன், தாராளமா போ... ஆனா அவளை பார்த்துட்டு திரும்ப இந்த வீட்டுக்குள்ள நீ நுழையக் கூடாது. அப்படியே போயிடு என கூறுகிறார். இதைக்கேட்டு விசாலாட்சி ஷாக் ஆகிறார். இம்புட்டு நாளா கட்டுன பொண்டாட்டியும், பெத்த பிள்ளைகளும் தான் இருந்தும், இல்லைனு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ பெத்தவள இருந்து, இல்லைனு நினைச்சிட்டு போறேன். நீ போ என சொல்கிறார் குணசேகரன். ஏன்யா இப்படியெல்லாம் பேசுற என கண்ணீர் சிந்துகிறார் விசாலாட்சி.

34
கொளுத்திப் போடும் அறிவுக்கரசி

உடனே அருகில் இருக்கும் அறிவுக்கரசி, அம்மாச்சி எதுக்கு இப்போ அழுகுறீங்க. மாமா சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அவளுங்க ஆடுன ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமா. மறந்துடுச்சா உங்களுக்கு. ஒன்னுமில்லாத பிரச்சனைக்கு இந்த வீட்டை விட்டு ஓடி, வயசுல பெரியவங்களான உங்கள அவளுங்க காலுல விழவச்சு தான இந்த வீட்டுக்கு வந்தாங்க. அந்த ஜீவானந்தத்தோட சேர்ந்துகிட்டு இவரை ஜெயிலுக்கு அனுப்புனாங்க. கோர்ட்ல ஏறி சாட்சி சொல்லி இந்த வீட்டை அசிங்கப்படுத்தி, இன்னைக்கு ஞானம் மாமா ஜெயில்ல உட்கார்ந்து களி திண்ணுட்டு இருக்காரு. நீங்க பெத்த புள்ள தான... உங்க ரத்தம் தான, இன்னைக்கு ஜெயில்ல உட்கார்ந்துட்டு இருக்கு, இதுக்கெல்லாம் காரணம் யாரு என அறிவுக்கரசி கேட்க... கேட்க பேச முடியாமல் வாயடைத்து நிற்கிறார் விசாலாட்சி.

44
குணசேகரன் சொன்ன வார்த்தையால் கண்ணீர் சிந்தும் விசாலாட்சி

அவ செஞ்சதுக்கெல்லாம் தான் இன்னைக்கு மண்டை பொழந்து ஆஸ்பத்திரியில உட்காந்திருக்கா என அறிவுக்கரசி சொல்ல, நீ கொஞ்ச நேரம் சும்மா இருடி என கெஞ்சிக் கேட்கும் விசாலாட்சி, ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அவ இந்த வீட்டு மருமகள் என விசாலாட்சி சொன்னதும், அந்த உறவெல்லாம் எப்பவே முடிஞ்சி போச்சு என கூறுகிறார் குணசேகரன். இறுதியாக எழுந்து செல்லும் போது, டேய் கதிர், அவங்க பார்க்கணும்னா பார்க்க போகட்டும், ஆனா இந்த வீட்டையும் என்னையும் தலை முழுகீட்டு போகச் சொல்லு என சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்புகிறார் குணசேகரன். இதனால் செய்வதறியாது அழுகிறார் விசாலாட்சி. இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். விசாலாட்சியின் இந்த திடீர் பாசம் என்ன ஆகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories