கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி விளையாட்டு – கார்த்திக்கை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ரேவதி!

Published : Aug 05, 2025, 04:56 PM IST

Revathy Hug and Kiss Her Husband Karthik Raja : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிப்பது போன்று ரேவதி அவரது கணவரான கார்த்திக்கை கட்டிப்பிடித்து முத்தமிட்ட காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது.

PREV
14
கார்த்திக்கை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ரேவதி

கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. என்னதான், சுவாரஸ்யமான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டும் சன் டிவி சிரீயல்களிடம் மொக்கை வாங்கி வருகிறது. இருந்தபோதிலும் நாளுக்கு நாள் புதிய புதிய கதாபாத்திரங்கள் சுவாரஸ்யங்கள், டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் என்று ஜீ தமிழ் கார்த்திகை தீபம் 2 குறித்து அப்டேட் கொடுத்துக்கொண்டே வருகிறது.

24
பாட்டி வீட்டில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

இந்த நிலையில் தான் ஒருவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்கு போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் இருக்கும் சாமுண்டீஸ்வரியை கார்த்திக் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்டு வெளியில் கொண்டு வந்துள்ளார். சாமூண்டீஸ்வரி கொலை செய்ததாக சொல்லப்படும் ராமசாமி சாகவில்லை. அவரை தேடி பாட்டி மற்றும் ரேவதியின் உதவியுடன் கண்டுபிடித்து மக்களிடம் நடந்தது என்ன என்பதை தெரியபடுத்தி அவனை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

34
கார்த்திக் மற்றும் ரேவதி காதல் காட்சிகள்

இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வெளியில் வர தான் வெளியில் வர காரணமாக இருந்த மாமியாரை பார்த்து நன்றி சொல்கிறார். இதையடுத்து சாமுண்டீஸ்வரி அவசர வேலையாக வெளியில் செல்ல குடும்பத்தோடு ரேவதி தனது பாட்டி வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அங்கு எல்லோரும் குடும்பமாக வந்திருக்கிறோம் என்று அவர்களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது கண்ணாமூச்சி ரே ரே விளையாட்டு விளையாடுகிறோம் என்ற பெயரில் கண்ணைகட்டி விளையாடுகிறார்கள். இதில் ரேவதி தனது கண்ணைக் கட்டிக் கொண்டு கார்த்திக்கை தேடுகிறார்.

44
பஞ்சாயத்து தலைவராகும் சாமுண்டீஸ்வரி

மேலும், மனதில் எப்படியாவது கார்த்திக்கை கட்டியனைத்து முத்தமிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கேற்பவும் சூழல் வரவே இருக்கி அனைத்து முத்தமிட்டார். இதைப் பார்த்த ரோகிணி, சுவாதி, பாட்டி, மயிலு, துர்கா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு ரேவதி மன்னித்துவிடுங்கள். பாட்டி என்று நினைத்து கட்டிப்பிடித்துவிட்டேன் என்று பொய் சொல்கிறார்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories