விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது செந்தில் மற்றும் மீனா, கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகளில் அடிக்கடி சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. சீரியல் டிஆர்பி பட்டியலில் சரிவை சந்தித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்னும் கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய புரோமோவில் செந்தில் தனது வாசனை திரவியத்தைதேடிக் கொண்டிருக்கும் நிலையில், அது தான் ஏற்கனவே காலி ஆகிவிட்டது. அதனால், நான் குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன் என்று மீனா, சொல்ல, உடனே உன்னுடைய வாசனை திரவியத்தை கொடு என்று கேட்டு வாங்கி அதிலேயே செந்தில் குளித்தார்.