Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!

Published : Jun 13, 2026, 08:16 AM IST

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தான் தர்ஷினியை கடத்தி இருக்கிறார் என ஆதி குணசேகரனிடம் கூறி இருக்கிறார் இராவணன்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய இராவணன், அவரை ஆஸ்பத்தியில் அனுமதித்து, அவர் பூரண குணமடையும் வரை கூடவே இருந்து அவரை நன்கு கவனித்து அவரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக, இராவணனை வீட்டுக்கே அழைத்து விருந்து வைத்துள்ளார் ஆதி குணசேகரன். முதலில் சாப்பிட மறுக்கும் இராவணன், பின்னர் ஆதி குணசேகரனின் அன்புக்கட்டளைக்கு இணங்க சாப்பிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்

25
மீண்டும் வீட்டுக்கு வரும் இராவணன்

பின்னர் தர்ஷினியை எப்படியாவது தேடிக் கண்டுபிடிப்பேன் என கூறிவிட்டு கிளம்பிச் சென்ற இராவணன் மறுதினமே ஆதி குணசேகரன் வீட்டுக்கு வந்து தர்ஷினி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். போலீஸ் தேடுது, ரொம்ப நாளா தேடிட்டு தான் இருக்கு. ஆனா ரிசல்ட் இல்லை. அதேமாதிரி உங்க ஆளுங்களும் தேடிக்கிட்டே தான் இருக்காங்க. அதன்மூலமும் எந்தவித க்ளூவும் கிடைக்கவில்லை. நான் கொஞ்சம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் போய் யோசிச்சு பார்த்தேன். இந்த வீட்டில் உங்களுக்கு எதிராக செயல்படுவது யார்... யார் என இராவணன் கேட்கிறார்.

35
கெஞ்சி கேட்கும் ஈஸ்வரி

அதற்கு ஆதி குணசேகரன், என் பொண்டாட்டி ஈஸ்வரியை தவிர, மத்த பொம்பளைங்க எல்லாருமே எனக்கு எதிரானவங்க தான் என கூறுகிறார். உடனே இராவணன், என்ன சார் இவங்கள போய் இப்படி சொல்றீங்களே, எல்லாரும் எவ்வளவு அமைதியா இருக்காங்க. ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசலையே என கூறுகிறார். அதற்கு ஆதி குணசேகரன், தம்பி சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க என கேட்கிறார். அருகில் இருந்த ஈஸ்வரியும், தயவு செஞ்சு சொல்லுங்க என் பொண்ணு எங்க இருக்கா என அழுதுகொண்டே அவரிடம் கேட்கிறார்.

45
ஜனனி மீது பழிபோட்ட இராவணன்

உங்க பொண்ணு எங்க இருக்கா என்பதை சரியாக ஒரு அரைமணி நேரத்தில் நான் கண்டுபிடிச்சிடுவேன். ஆனால் உங்க பொண்ணு கடத்தப்பட்டாளா இல்லை யாராச்சும் ஏமாத்தி அவளை கூட்டிட்டு போனாங்களா அப்படிங்குற கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்கல. என்னால எல்லாத்தையும் உடைச்சு பேச முடியாது. என்னதா இருந்தாலும் நான் வெளி ஆளு. நான் தகவல் சொல்லப்போய் அது உங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை ஆகிவிடக் கூடாது. உங்க பொண்ணு திண்டுக்கல் சிறுமலை ஏரியாவில் இருக்காங்க. ஆனா பொண்ணை கடத்திட்டு போனது ஜனனி தான் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் இராவணன்.

55
கதறி அழும் ஜனனி

இப்படி இராவணன் ஜனனி மீது பழிபோட்டிருக்க, மறுபுறம் தர்ஷினியை தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் ஜனனி. தர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருந்த பில்டிங்கில் மீண்டும் ஒருமுறை சென்று தேடிய ஜனனி, அங்கு தர்ஷினியின் மோதிரம் கிடப்பதை பார்க்கிறார். இங்க தான் தர்ஷினி இருந்திருக்கா, அய்யய்யோ அவளை தவறவிட்டுட்டேனே என கண்ணீர்விட்டு அழுகிறார் ஜனனி. மறுபுறம் இராவணனுக்கும் ஜனனி, தர்ஷினி இருக்கும் ஏரியாவை நெருங்கிய விஷயம் தெரியவருகிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories