டைவர்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் சோழன்... நிலாவுக்கு வந்த சந்தேகம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Jan 20, 2026, 12:19 PM IST

அய்யனார் துணை சீரியலில் டைவர்ஸ் கேஸ் தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருக்கும் சோழன், தான் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நிலாவும் சோழனும் டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் விசாரணைக்காக கோர்ட்டு செல்கின்றனர். அப்போது நீதிபதி உங்கள் முடிவில் மாற்றம் இருக்கிறதா என கேட்க, அதற்கு நிலா பதில் சொல்லாமல் தயங்கி நிற்க, சோழன் பட்டென, தங்கள் முடிவில் மாற்றம் இல்லை. டைவர்ஸ் கொடுத்திருங்க என சொல்கிறார். இதன்பின்னர் அவர்கள் இருவரையும் மீண்டும் கவுன்சிலிங் அனுப்புகிறார் நீதிபதி. அதன்பின்னர் இருவரும் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்கள். அதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
கவுன்சிலிங்கில் சோழன் சொன்னதென்ன?

நிலாவும், சோழனும் ஒன்றாக கவுன்சிலிங் செல்கிறார். அப்போது அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் நபர், கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் கூட ஆகல அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா, உட்கார்ந்து மனசுவிட்டு பேசுங்க, அதில் சரியாகாத பிரச்சனை எதுவுமே இல்லை என சொல்கிறார். அவர் இவ்வளவு எடுத்து சொல்லியும் எங்களுக்கு டைவர்ஸ் தான் வேண்டும் என சொல்கிறார் சோழன். நான் ஒரு பொறுக்கி, ஆனா அவங்க லெவலே வேற, இவங்க என்கிட்ட தெரியாம மாட்டிக்கிட்டாங்க. இந்த கவுன்சிலிங்கெல்லாம் வேண்டாம். நீங்க டைவர்ஸ் கொடுத்திருங்க என சொல்கிறார் சோழன்.

34
நிலாவுக்கு வந்த சந்தேகம்

சோழனின் பேச்சைக் கேட்டு நிலா முகம் வாடிப் போகிறது. இதைப்பார்த்த சோழன், நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆகுது என சொல்லிக் கொண்டே வெளியே வர, அவரிடம் பேசும் நிலா, என்ன உள்ள அப்படியே நல்லவர் மாதிரி நடிக்குறீங்க என கேட்கிறார். ஆமாங்க, நீங்க, உங்களுக்கு என்னை பிடிக்கலனு பல முறை சொல்லிட்டீங்க, அப்புறம் எதுக்கு கவுன்சிலிங்கில் உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணனும் அதான் அப்படி சொன்னேன் என கூறுகிறார் சோழன். பின்னர் வீட்டுக்கு வந்த சோழனிடம், கோர்ட்டில் என்ன ஆச்சு என சேரன் கேட்க, டைவர்ஸ் தரேன்னு சொல்லிட்டேன் என கூறுகிறார் சோழன்.

44
கண்டுபிடித்த நடேசன்

இதையடுத்து சோழனை ரோட்டில் பார்த்து பேசும் நடேசன். நீ நிலாவுக்கு டைவர்ஸ் தருவேன்னு சொன்னதுக்கு பின்னாடி உள்குத்து இருப்பது எனக்கு தெரியும்டா, நீ டைவர்ஸ் தரேன்னு சொன்னதும், நிலா உன்கிட்ட வந்து நான் சோழன் கூட தான் வாழுவேன்னு சொல்லுவான்னு நினைச்சு தான் அப்படி சொன்ன என கேட்க, ஆஹா கண்டுபிடிச்சிட்டாரே என மனசுக்குள்ளேயே பேசிக்கொள்ளும் சோழன், அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே என சொல்கிறார். நீ நினைக்குற மாதிரிலாம் எதுவும் நடக்காது வீணா கற்பனை கோட்டை கட்டிகிட்டு இருக்காத என சொல்கிறார் நடேசன். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories