எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், அவருடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கைதுக்கு பயந்து ஆதி குணசேகரனும் அவருடைய தம்பிகளும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். பினாமி குமார் என்பவர் தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர் ஆதி குணசேகரன் தரப்பு வக்கீலிடம் பேசி, சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து கதிர் மற்றும் ஞானத்தை தப்பிக்க வைக்க ஐடியா கொடுத்திருக்கிறார். இருப்பினும் ஆதி குணசேகரனுக்கு பிடி வாரண்ட் போடப்பட்டு உள்ளதால், அவரால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தன் தம்பிகளை வீட்டுக்கு கிளம்ப சொல்கிறார் குணசேகரன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆர்டர் போடும் ஆதி குணசேகரன்
ஆதி குணசேகரன் தன் தம்பிகளை பிரியும் முன் இனிமே நாம் சந்திப்போமா, இல்லையானு தெரியாது என ஃபீல் பண்ணி பேசுகிறார். அதோடு நீங்கள் இருவரும் வீட்டுக்கு சென்று உங்கள் பொண்டாட்டி பிள்ளைகளை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் ஆர்டர் போடுகிறார். கண்டிப்பாக அதை செய்வேன் என்று சபதம் விட்டு கிளம்புகிறார் கதிர். மறுபுறம் ஞானம், கண்ணீருடன் வந்து தன் அண்ணனிடம், நான் என்னுடைய பொண்டாட்டியை என் சொல்பேச்சு கேட்க வைப்பேன். அப்படி செய்ய முடியாவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
34
வீட்டுக்கு வந்த கதிர்
இதையடுத்து வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் கதிர், அப்போது வாசலில் விசாலாட்சி அமர்ந்திருக்க, அவரைப்பார்த்து கடுப்பாகும் கதிர், நீ எங்களை பெத்தவ அந்த ஒரே ஒரு காரணத்துக்காக தான் உன்னை விட்டுவைக்கிறேன் என சொல்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விசாலாட்சி, நீங்க பண்ணுன வேலைக்கு நான் உங்களை விட்டு வச்சது தான் பெரிய விஷயம் என சொல்ல கதிர், ஞானம் இருவரும், நம்ம அம்மாவ இப்படி பேசுகிறார் என ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து அறிவுக்கரசி மற்றும் முல்லையை அழைத்துக் கொண்டு தமிழ் சோறு ஃபுட் டிரக் இருக்கும் இடத்துக்கு செல்கிறார் கதிர்.
அங்கு பிசினஸில் ஜனனி பிசியாக இருக்க, அப்போது கதிரும், ஞானமும் வருவதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அவர்களிடம் சென்று வழக்கம்போல் வாய்ச்சவடால் விடும் கதிர், நம்ம கெளரவத்தையே குழியில இறக்கிட்டு இங்க வந்து கடை வைக்குறீங்களோ, ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் மூட்டை கட்டி ஓரமா வச்சிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க என கதிர் சொல்ல, எங்களோட கடையை நாங்க போட்டிருக்கோம் நீ எதுக்கு இங்க வந்து தேவையில்லாம பிரச்சனை பண்ற, ஒழுங்கா போயிரு என பதிலடி கொடுக்கிறார் ஜனனி. பின்னர் கடையை அடிச்சு நொறுக்க பாய்கிறார் கதிர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.