சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி இத்தனை நாட்களாக என்னென்ன தில்லுமுல்லு வேலைகளை செய்தார் என்கிற மொத்த லிஸ்ட்டையும் போட்டுடைத்துள்ளார் வித்யா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வீட்டை விட்டு துரத்தப்பட்ட விஷயம் அறிந்த பைனான்சியர், வீட்டுக்கு வந்து மனோஜை பற்றி கேவலமாக பேசுகிறார். இதனால் விஜயா ரோஷப்பட்டு அவர் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறார். அந்த பைனான்சியரும் அந்த பத்திரத்தை வாங்கிக் கொண்டு, சொன்ன தேதியில் எனக்கு காசு வரணும் இல்லேனா நான் என்னோட வேலையை காட்டிருவேன் என மிரட்டிவிட்டு செல்கிறார். போகும் போது சிந்தாமணிக்கு போன் போடும் அந்த பைனான்சியர், விஜயா கையெழுத்து போட்டுக்கொடுத்த விஷயத்தை சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
26
உஷாரான சிந்தாமணி
விஜயா பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததை அடுத்து, அவரின் வீட்டை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என திட்டம் போடுகிறார் சிந்தாமணி. அப்போது அங்கு வரும் ரோகிணியிடம், வீட்டில் மனோஜ் போட்டோவை எரித்த விஷயத்தை கூறுகிறார். இதுக்கப்புறம் நீ அந்த வீட்டுக்கே செல்ல முடியாது போல என கூறும் சிந்தாமணி, உன் புருஷன் மனோஜ் வாங்குன கடனுக்கு விஜயா பொறுப்பேற்றிருக்கும் விஷயத்தையும் சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, மனோஜா இப்படி செய்தார் என்கிற அதிர்ச்சியில் இருக்கிறார்.
36
முத்து மீனாவுக்கு தெரியவரும் உண்மை
இதையடுத்து சத்யா, சிட்டி உடன் வேலை பார்த்த நண்பர் ஒருவரை வழியில் பார்த்து பேசுகிறார். அப்போது அவர் தான் கடை வைக்கலாம் என்கிற ஐடியாவில் இருப்பதாகவும் அதற்கு கடன் வேண்டும் என்று கேட்க, சத்யாவும் தான் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனி மூலம் கடனுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்கிறார். அப்போது அந்த நபர் சத்யாவிடம் ஒரு உண்மையை சொல்கிறார். அன்னைக்கு ஒரு நாள் உங்க மாமா முத்துவின் கார் பிரேக் வயர் அறுந்து விபத்துக்குள்ளானதல்லவா அதை பண்ணியது சிட்டி, தான் அதற்கு உதவியது ரோகிணி தான் என்கிற விஷயத்தையும் போட்டுடைக்கிறார். பின்னர் இந்த விஷயத்தை சத்யா, முத்து மற்றும் மீனாவிடம் போன் போட்டு சொல்கிறார்.
இதன்பின்னர் பார்வதியின் வீட்டில் வைத்து சிந்தாமணியும், விஜயாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது சிந்தாமணியிடம் தனக்கு கடன் வேண்டும் என்று விஜயா கேட்க, அதற்கு சிந்தாமணி, தனக்கு தெரிந்த பைனான்சியர் இருக்கிறார். அவர் கடன் கொடுப்பார் ஆனால் அதற்கு எதையாவது அடமானம் வைக்க வேண்டும் என்று சொல்ல, என் பெயரில் வீடு தான் இருக்கு என விஜயா கூற, அதுபோதுமே என சிந்தாமணி சொல்கிறார். பின்னர் பார்வதி, மனோஜுக்கும் ரோகிணிக்கும் டைவர்ஸ் வாங்குவதற்காக வக்கீல் அட்ரஸை விஜயாவிடம் கொடுத்து அனுப்புகிறார்.
56
உண்மையை போட்டுடைத்த வித்யா
இதையடுத்து முத்து வீட்டுக்கு வந்து தன்னுடைய காரில் பிரேக் வயரை அறுத்து என்னை விபத்தில் சிக்க வைக்க பார்த்தது ரோகிணி தான் என்கிற விஷயத்தை எல்லாரிடமும் கூறுகிறார். அப்போது அங்கு வரும் வித்யா மற்றும் முருகன், ரோகிணி இதுவரை என்னவெல்லாம் தில்லுமுல்லு வேலைகள் செய்தார் என்பதையெல்லாம் சொல்லிவிடுகிறார்கள். அதாவது மனோஜின் கடையில் இருந்து பணத்தை திருடியது, பார்வதி வீட்டில் இருந்து பணத்தை எடுத்து அந்த பழியை மீனா மேல போட்டது என எல்லா திருட்டு வேலையையும் ரோகிணி தான் செய்தார் என வித்யா சொல்ல, விஜயாவுக்கு மண்டையே வெடிக்கும் அளவுக்கு கோபம் வருகிறது.
66
டைவர்ஸுக்கு ஓகே சொன்ன அண்ணாமலை
அந்த ரோகிணியை சும்மா விடக்கூடாது, அவளை போலீஸில் பிடிச்சு கொடுக்கணும் என விஜயா சொல்ல, கிரிஷை மனதில் வைத்து அதையெல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லும் அண்ணாமலை, முதலில் அவளுக்கும் மனோஜுக்கு டைவர்ஸ் வாங்குவதற்கான வேலையை பாரு என சொல்கிறார். இதையடுத்து விஜயா, மனோஜை அழைத்துக் கொண்டு, பார்வதி சொன்ன வக்கீலை பார்த்து டைவர்ஸ் பற்றி பேசச் செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? டைவர்ஸுக்கு சம்மதிப்பாரா ரோகிணி? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.