பீச்சில் ரொமான்ஸ் பண்ணும் சோழன் - நிலா... டைவர்ஸ் முடிவு என்ன ஆச்சு? அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Apr 01, 2026, 08:57 AM IST

அய்யனார் துணை சீரியலில் சோழனும், நிலாவும் ஒரு தம்பதி உடன் ட்ரிப் சென்றிருந்த நிலையில், அது முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், ட்ரிப் முடிந்து சோழனும், நிலாவும் மீண்டும் சென்னைக்கு வருகிறார்கள். வரும் போது இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டு வருகிறார்கள். முதலில் ட்ரிப் வந்த தாத்தா, பாட்டி இருவரையும் அவர்கள் வீட்டில் டிராப் பண்ணுகிறார்கள். அவர்கள் இருவரும், நிலாவையும், சோழனையும் வீட்டுக்குள் அழைத்து சென்று, ஒரு தாம்பூலத்தில் பழம், பூ, பணம் என எல்லாம் வைத்து கொடுக்கிறார்கள். அடுத்த முறை வரும்போது இருவரும் எங்கள் வீட்டில் சாப்பிட வர வேண்டும் என கண்டிஷன் போட்டு இருவரையும் அனுப்பி வைக்கிறார்கள்.

25
பீச்சுக்கு செல்லும் நிலா - சோழன்

அதன்பின்னர் நிலாவும், சோழனும் காரில் கிளம்பி வீட்டுக்கு செல்லும் வழியில், சோழனிடம் பேசும் நிலா, இப்போ நேரா வீட்டுக்கு தான் போறீங்களா என கேட்க, ஆமா என சொல்கிறார் சோழன். உடனே நிலா, நம்ம வேற எங்கயாச்சும் போவோமா என கேட்கிறார். அதற்கு சோழன், என்னங்க மறுபடியும் ட்ரிப் போலாம்னு சொல்றீங்களா என கேட்க, இல்ல, பீச்சுக்கு போலாமா என நிலா கேட்டதும், சரிவாங்க போவோம் என சொல்லி, நிலாவை அழைத்துக் கொண்டு பீச்சுக்கு செல்கிறார் சோழன். அங்கு இருவரும் ஜோடியாக சென்று கடலின் அழகை ரசித்தபடி அமர்ந்திருக்கிறார்கள்.

35
நடேசன் கொடுக்கும் ஐடியா

மறுபுறம் அனீஸ் சேரனின் வீட்டுக்கு வருகிறார். அப்போது வீட்டின் வெளியே அமர்ந்திருக்கும் நடேசன், அனீஸை அழைத்து, என்னடா பிரச்சனையெல்லாம் முடிஞ்சிருச்சா என கேட்கிறார். ஆமா முடிஞ்சிருச்சு என சொல்கிறார் அனீஸ். அதற்கு நடேசன், அவங்க எங்கயாச்சும் இங்க இருக்க போறாங்க, பார்த்து சூதானமா இரு என சொல்ல, இல்லை அவங்கெல்லாம் ஊருக்கு போயிட்டாங்க. நான் தான் 10 நாள்ல அழைச்சிட்டு வர்றேன்னு சொல்லி சமாளிச்சுட்டேன் என சொல்கிறார். என்னது 10 நாள்ல அழைச்சிட்டு போறியா என நடேசன் கேட்க, இல்ல அதற்குள் ஏதாச்சும் பண்ணனும் என சொல்கிறார் அனீஸ்.

45
அனீஸ் எடுக்கும் முடிவு

உன் தங்கச்சிக்கும் சேரனை பிடிச்சிருக்கு, சேரனுக்கும் உன் தங்கச்சியை புடிச்சிருக்கு, உனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, அப்புறம் என்ன சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிர வேண்டியதுதானா. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எவன் வந்தாலும் நம்ம போலீஸை வைத்து சமாளிச்சிக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் போலீஸ் பொம்பள புள்ளைக்கு தான் சப்போர்ட் பண்ணும். நீ கவலைப்படாத, நீக்கிரம் கல்யாணம் பண்ற வேலையைப் பாரு என சொல்கிறார். நானும் போய் சேரன் கிட்ட இது சம்பந்தமா பேசுறேன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்கிறார் அனீஸ்.

55
விளையாடும் சோழன் - நிலா

அதன்பின்னர் சோழனையும் நிலாவையும் காட்டுகிறார்கள். பீச்சில் ஜோடியாக வலம் வருகிறார்கள். அப்போது தண்ணீரில் விளையாட ஆசைப்படுகிறார் நிலா. சோழன் நானும் வர்றேன்னு சொல்லி, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஜாலியாக தண்ணீரில் விளையாடுகிறார்கள். அதன்பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது சோழனிடம் பேசும் நிலா, நீ பெரிய ஆளா வரணும், நீ ஏதாச்சும் சாதிக்கணும்னு அட்வைஸ் மழை பொழிகிறார். என்னங்க என்னைய விட்டு போகப் போறீங்களா, அதுக்காக தான் என்னிடம் அட்வைஸ் பண்ணுறீங்களா என சோழன் கேட்க, அதற்கு நிலா, நான் உன்னைய விட்டுலாம் போக மாட்டேன்.

நீ எனக்காக எவ்வளவோ பண்ணீருக்க, அதுக்காக நான் உனக்கு ஏதாச்சும் பண்ணனும்ல என சொல்ல, அதற்கு சோழன், நீ என்கூடவே இருந்தா அதுவே எனக்கு போதும் என சொல்கிறார். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளு நான் தர்றேன் என நிலா சோழனிடம் கேட்க. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. சோழன் என்ன கேட்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories