சிங்கப்பெண்ணே பரபரப்பு: ஆனந்தியின் கண்ணீர்... துளசியின் சதி வெற்றி பெற்றதா? உறைந்து போன ரசிகர்கள்!

Published : Mar 31, 2026, 02:10 PM IST

சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' தொடரில் தற்போது உச்சக்கட்ட சோகம் மற்றும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆனந்தியின் வாழ்க்கையைச் சிதைக்கத் துடிக்கும் துளசியின் சதி வலைகளால் ஏற்பட்டுள்ள இந்தத் திருப்பம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
16
Singappenne Serial Today Episode Promo

சன் டிவியில் ப்ரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' சீரியல், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக மார்ச் 31 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பெரிய திருப்பத்தை முன்னறிவிக்கிறது. கிராமத்து வெள்ளந்திப் பெண்ணான ஆனந்தி, நகரத்துச் சூழலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளப் போராடும் நிலையில், அவருக்கு எதிராகப் பின்னப்படும் சதி திட்டங்கள் இந்த வார கதையின் மையமாக உள்ளன.

26
Thulasi and Anandhi

இந்த ப்ரோமோவில், ஆனந்தியின் கணவர் தனது தாயிடம் ஆனந்தியின் நற்பண்புகளைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறார். ஆனந்தியைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தினருக்கு, அவரது நல்ல குணங்களை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம் என்று அவர் கருதுகிறார். எனவே, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கச் செல்லும்போது ஆனந்தியுடன், தாய்யை அழைத்துச் செல்ல சொல்கிறார். இது ஆனந்தியின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையையும் காதலையும் காட்டுகிறது.

36
Sun TV Singappenne Serial

ஆனந்தி மீது பாசம் காண்பிப்பது போல் நடித்து அவளுக்கு தலை சீவி தகாத வேளை செய்ய அவரின் முடியை சேகரித்து வைத்து கொண்டாள். இதை அறியாத ஆனந்தி தனது அக்காவிற்கு போன் செய்து, நடந்த அனைத்தையும் சொல்லி மகிழ்ச்சி அடைக்கிறார். ஆனால் அதற்கு கோகிலா, “ பாம்பு கொத்துவது அதன் இயற்கையான குணம். அதனால் நீ அதை நம்பாதே” என எச்சரிக்கிறார்.

46
Singappenne Promo

இருப்பினும், ஆனந்திக்கு கிடைக்கும் இந்த நல்ல பெயரைத் தடுக்க துளசி ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டுகிறார். ஆனந்தியை எப்படியாவது வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்று நினைத்திருந்த அவர் தற்போது ஒரு படி மேலே சென்று அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டார்.

56
Thulasi's plan against Anandhi Singappenne

துளசியின் சதி வேலையால், மளிகை மூட்டைகளை அடுக்கச் சமையலறைக்கு வரும்போது, ஆனந்தி நிலைதடுமாறி வழுக்கி கீழே விழுகிறார். அவளுக்கு பலமாகப் அடிபட்டுத் துடிக்கிறார். கர்ப்பமாக இருப்பதால் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இந்தச் சதித்திட்டம் ஆனந்தியின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

66
Singapenne serial Anandhi pregnancy issue

இந்த ப்ரோமோவில் துளசியின் வில்லத்தனம் மற்றும் ஆனந்தியின் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடு மிக அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆனந்தியின் கணவர் அன்பு, துளசியின் சூழ்ச்சியைக் கண்டுபிடிப்பாரா? அல்லது ஆனந்தி மீண்டும் ஒருமுறை அவமானத்தைச் சந்திப்பாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories