எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புது வில்லனாக எண்ட்ரி கொடுத்துள்ள இராவணன், தன்னுடைய ரெளடித்தனத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதைப்பற்றி இந்த எபிசோடில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், நீண்ட நாட்களாக பில்டப் கொடுத்து மட்டும் இழுத்தடிக்கப்பட்ட ராணா கேரக்டர் ஒரு வழியாக ரிவீல் செய்யப்பட்டு உள்ளது. அவர் தனது தந்தை வைத்த ராணா என்கிற பெயரை மாற்றி ராவணன் என வைத்துக் கொண்டதாக சொன்னதோடு, தன்னுடைய இரட்டை முகத்தையும் காட்டி இருந்தார். அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்த கையோடு, தனது எதிரிகளை வதம் செய்திருந்தார். பின்னர் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள ரத்த தானம் செய்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
இராவணன் ஆட்டம் ஆரம்பம்
10 தலைகளின் சக்தியுடன் களத்தை கைப்பற்ற களமிறங்கி இருக்கிறார் ராவணன் ஆதி முத்து. இவரின் முதல் எதிரியாக ஆதி குணசேகரன் தான் இருக்கிறார். ஏனெனில் அவர் கண்முன்னே அவரின் அம்மாவை குத்தி கொன்றிருக்கிறார் குணசேகரன். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என சிறுவயதில் இருந்தே வெறியோடு சுற்றி இன்று மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருக்கிறார். உடல் உறுப்பு திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்பனை என தவறான வழியில் கோடி கோடியாய் சம்பாதித்து இன்று மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார் ராவணன். அவரைப் பிடிக்க களத்தில் இறங்கி உள்ளார் மதிவதினி.
35
மதிவதினிக்கு சிக்கல்
பாவக் கணக்காக இருந்தாலும் சரி, புண்ணியக்கணக்காக இருந்தாலும் சரி எதையும் மிச்சம் வைக்க கூடாது என்பதே இராவணனின் ஃபார்முலா. அவரின் கீழ் தான் ஆலிவர் தேவசகாயம் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சிக்கியதால், அவரையே சாகச் சொன்ன இராவணன், அடுத்து தங்கள் நெட்வொர்கை பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ள மதிவதினியையும் குறி வைத்திருக்கிறார் போல தெரிகிறது. மறுபுறம் ஜனனி அவருக்கு சப்போர்டாக செல்ல இருப்பதால், அவரது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. இந்த பிரச்சனையால் ஜனனி வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ள ஈஸ்வரியிடம் பாசத்தைக் கொட்டுகிறார் ஆதி குணசேகரன். முதன்முறையாக அவருக்கு தான் ஆசை ஆசையாக வாங்கி வந்த மல்லிகைப் பூவை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய தம்பிகளுக்கும் ஒரு முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டிருக்கிறார். யாரும் கொடுக்காத மரியாதையை உங்க அண்ணிக்கு நீங்க கொடுக்க வேண்டும் என கதிர் மற்றும் ஞானத்திடம் கேட்டுக்கொள்கிறார். இனி இந்த குடும்பத்து பொறுப்புகளை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் நல்லதை செய்யுங்கள் என கூறி இருக்கிறார்.
55
தடம் மாறிய கதைக்களம்
தற்போது இராவணனின் எண்ட்ரியால் கதைக்களத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை வில்லனாக இருந்த ஆதி குணசேகரன், தன் மனைவி பழசை எல்லாம் மறந்ததை அறிந்ததும் நல்லவராக மாறி இருக்கிறார். அநேகமாக விரைவில் ஆதி குணசேகரனை தீர்த்துக் கட்ட இராவணன் வருவார் என தெரிகிறது. இராவணனால் இனி அடுத்தடுத்து எதிர்பாரா ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஜனனி உடன் சேர்ந்து மதிவதினி எடுக்கப்போகும் முடிவு என்ன? இராவணன் ஆலிவரை கொன்றுவிட்டாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.