சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா, தன்னுடைய கணவர் ஆதி தன்னை ஏமாற்றியதாகவும் அவரிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவர் ஆதி என்பவரை காதலித்து அவரை பதிவுத் திருமணமும் செய்திருக்கிறார். பின்னர் அவர் ஒரு பிராடு என்பது தெரிந்ததும் அவரைவிட்டு பிரிந்திருக்கிறார். இதையடுத்து அவரது காதலன் நான் தான் எனக்கூறி அவரின் கணவர் ஆதி யூடியூப்பில் பேட்டி கொடுத்து வந்தார். அண்மையில் பிக் பாஸ் தாமரைச் செல்வி, ஆதி தன்னிடம் நகை வாங்கி ஏமாற்றிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஸ்வேதா, ஆதி பற்றி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
25
ஸ்வேதா போட்ட பதிவு
அவர் வெளியிட்ட பதிவில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது வாழ்க்கை ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறியுள்ளார். மிகவும் இளமையிலேயே திருமணம் செய்து கொண்டதால், கணவரின் உண்மையான நிலைமைகள் குறித்து அறியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருப்பதாக கூறிய அவரது கணவர், அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில் தனது பணத்தையும் ஆதரவையும் பயன்படுத்த வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
35
அனைத்தும் பொய்
ஆனால் காலப்போக்கில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை பின்னர் உணர்ந்ததாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். மேலும், அவர்மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்ததன் பின்னர், இந்த உறவை தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
காதல் காலத்தில் ‘வியாபாரம்’ என்ற பெயரில் தன்னிடமிருந்து பணமும் நகைகளும் பெற்றுக் கொண்டதாகவும், முழு நம்பிக்கையுடன் அதை வழங்கியதையே இன்று வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், சட்டரீதியாக பிரச்சினையை சமாளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தன்னிடம் இருந்து விலகிய பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதனால் சமூக மற்றும் மன ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவரது கணவர் பலரையும் இதேபோல் ஏமாற்றியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, யாரும் அவரை நம்பி எந்த வகையான தொழில் வாய்ப்புகளிலும், குறிப்பாக promotion மற்றும் photoshoot போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
55
தாமரைச் செல்வி புகார்
இதற்கு முன்னர், பிக்பாஸ் பிரபலமான தாமரை செல்வியும் அதே நபர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நகைகள் வாங்கி ஏமாற்றியதாக அவர் தெரிவித்திருந்தது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்வேதா, இறுதியில் நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.