Siragadikka Aasai Serial 18 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை முத்து தூக்கிச் சென்ற நிலையில், சிந்தாமணி விஜயா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் பிளான் பண்ணி ரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிவிட்டார்கள். மகளை தேடி வந்து ஏமாந்துபோன ரேகாவின் தந்தை, சிந்தாமணிக்கு இந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சிந்தாமணி, நீங்க கவலைப்படாதீங்க, ரேகாவை எப்படி தானா வர வைக்கணும்னு எனக்கு தெரியும் என சொல்லிக்கொண்டு காரில் செல்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவும் பாட்டி வீட்டில் வைத்து பயங்கரமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரொம்பநாள் சத்யாவையும், ரேகாவையும் இங்க வச்சிருக்க முடியாது என சொல்கிறார் முத்து.
சத்யா - ரேகாவுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் முத்து
அப்போ என்ன பண்ணலாம் என மீனா கேட்க, அவர்கள் இருவருக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடணும் என கூறுகிறார் முத்து. கல்யாணம் உடனே பண்ண முடியாது, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண கொஞ்ச டைம் எடுக்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய நாம் இங்கிருந்து செல்ல வேண்டும். ரேகாவும், சத்யாவும் பாட்டி வீட்டிலேயே இருக்கட்டும். நம்ம இப்போ அங்க போனா போலீஸ் நம்மளை வந்து அரெஸ்ட் பண்ண வாய்ப்பு இருக்கு. அதை தடுக்க தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என சொல்லி தன் போனை எடுக்கிறார் முத்து.
35
ரேகா கொடுத்த வாக்குமூலம்
போலீஸ் நம்மை கைது செய்யாமல் இருக்க ஒரு ஆதாரம் தேவை. அதற்கு ரேகா வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என சொல்லி, ரேகாவை பேசச் சொல்லி வீடியோ எடுக்கிறார்கள். போலீஸ் கைது செய்ய வந்தாலும் இந்த வாக்குமூலத்தை காட்டி தப்பிவிடலாம் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார் முத்து. தானே விருப்பப்பட்டு தான் இவர்களுடன் வந்தேன். என்னை யாரும் கடத்தி வரவில்லை. நான் சத்யாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவனை தான் கல்யாணம் பண்ண போறேன் என்று ரேகா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இதையடுத்து முத்துவும், மீனாவும் வீட்டுக்கு செல்கிறார்கள். சிந்தாமணி நேரா விஜயாவின் வீட்டிற்கு வந்து முத்துவும், மீனாவும் தான் என்னோட பொண்ணை கடத்திட்டாங்க, ஒழுங்கு மரியாதையா கொண்டுவந்து விட்டுறுங்க, இல்லேனா உங்க எல்லாரையும் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருவேன்னு பயங்கரமா மிரட்டுகிறார். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படாத விஜயா, அவரை கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார். சிந்தாமணி அங்கிருந்து சென்ற பின்னர், எதுக்கு அவ பொண்ணை நம்ம கடத்தனும், பேசாம அவளை அவங்க அம்மாகிட்டயே விட்ருங்க என கூறுகிறார் விஜயா.
55
முத்து - மீனாவுக்கு கிடைத்த பாராட்டு
மறுபுறம் மனோஜும், இதனால் என்னுடைய பிசினஸுக்கு பாதிப்பு வந்தால் என்ன செய்வது என பயந்து நடுங்குகிறார். பின்னர் முத்துவும், மீனாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு செல்கிறார்கள். அங்கு முத்து, மீனாவும் ரேகா - சத்யாவை சேர்த்து வைக்க செய்த சாகசத்தை அங்கிருப்பவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டுகிறார்கள். அவங்க கல்யாணத்துக்கு எங்களையும் மறக்காம கூப்பிடுங்க, நாங்களும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என கூறுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.