அப்படி இருக்கையில் கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கியிருந்த ஷமா, தான் எலிமினேட் ஆக மாட்டேன் என்கிற ஓவர் கான்பிடன்ஸால் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தாமலேயே எலிமினேட் ஆகி இருக்கிறார். ஷமா உடன் முத்தழகி, அக்ஷிதா, அஸ்மிதா ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன், ஷமாவிடம் உங்களிடம் இருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தப் போகிறீர்களா என்று கேட்க, அதற்கு ஷமா நோ சொல்லிவிட்டார். தான் எலிமினேட் ஆக மாட்டேன் என்கிற நம்பிக்கையில் ஷமா இப்படி சொல்லி இருந்தார்.