Youtuber TTF Vasan Net Worth : யூடியூப்பராக இருந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வரும் டிடிஎஃப் வாசன், சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை செம விறுவிறுப்பாக்கிய போட்டியாளர் என்றால் அது டிடிஎஃப் வாசன் தான். அவர் இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றபோது அவருக்கு கேம் என்னவென்றே புரியவில்லை என சக போட்டியாளர்கள் சொல்ல, அடுத்த வாரமே அங்கு நடந்த ஹெய்ஸ்ட் டாஸ்க்கில் தனி ஆளாக டைமண்டை திருடி, யாருமே கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்து வைத்ததோடு, ஒட்டுமொத்த வீட்டையும் ஒருவாரம் லோலோனு அலையவிட்டார் வாசன். அந்த வாரமே அவர் தான் டைட்டில் அடிக்கப் போகிறார் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.
25
டைட்டில் வின்னர் ரேஸில் டிடிஎஃப் வாசன்
கடந்த வாரம் வீக் எண்ட் எபிசோடில் கூட வாசனுக்கு கிடைத்த ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை பார்த்து உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் எல்லாம் வாயடைத்துப் போய் உள்ளார்கள். அவரை ஓட்டிங்கில் வீழ்த்த முடியாது என்பது தெரிந்து, எப்படியாவது அவரை டிரிகர் பண்ணி, ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளார்கள் சக போட்டியாளர்கள். கடந்த வாரமே முகேஷை வாசன் அடிக்கப் போனது மிகப்பெரிய சர்ச்சையாகி அவருக்கு மஞ்சள் கார்டும் கொடுக்கப்பட்டது. இன்னொரு முறை மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
35
சிறை முதல் சினிமா வரை
இப்படி பிக் பாஸ் வீட்டில் வார வாரம் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வாசன், வெளியிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதுமட்டுமின்றி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கியபோது கைதாகி சில மாதங்கள் சிறையிலும் இருந்தார் வாசன். பின்னர் தன்னுடைய சொந்த மாமா பொண்ணையே கல்யாணம் செய்துகொண்ட அவர், கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அவர் நடித்த ஐபிஎல் என்கிற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.
இந்த நிலையில், டிடிஎஃப் வாசனின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் அவரின் யூடியூப் சம்பாத்தியம் போன்ற தகவல்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. தனக்கு யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் ரூ.1.59 கோடி இருக்கும் என வாசனே தன்னுடைய சேனலில் ஓப்பனாக கூறி இருக்கிறார். அதில் 40 லட்சம் தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்துவிட்டதாகவும், 20 லட்சத்துக்கு ஹயபுசா பைக் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் கைதானபோது அதன் வழக்கிற்காக மட்டும் 9 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக கூறி உள்ளார்.
55
டிடிஎஃப் வாசனின் சொத்து மதிப்பு
இந்த பணத்தில் இருந்து தன்னுடைய அம்மாவுக்கு 5 லட்சம் கொடுத்தாராம். போர் போடுவதற்காக அவர் கேட்டபோது 5 லட்சம் கொடுத்ததாக கூறி உள்ளார் வாசன். இதுதவிர தான, தர்மங்கள் மட்டும் 40 லட்சம் செய்திருப்பேன் என கூறி இருக்கிறார். எஞ்சியுள்ள 35 லட்சத்தில் சொந்தமாக டிடிஎஃப் பிட்ஷாப் வைத்தது என இதர செலவுகளை செய்ததாக தெரிவித்திருக்கிறார். யூடியூப் மூலம் மட்டுமே 1.59 கோடி சம்பாதித்த வாசனுக்கு கோவை அருகே சொந்த விவசாய நிலம், வீடு எல்லாம் உள்ளது. அதெல்லாம் சேர்த்து பார்த்தால் அவரின் சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.