Ethirneechal Thodargiradhu : குடும்பத்தை பிரிக்கும் விசாலாட்சி... ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் இராவணன்..!

Published : Jun 19, 2026, 10:32 AM IST

Ethirneechal Thodargiradhu Serial 19 June 2026 Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ராவணன், ஆதி குணசேகரன் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன நிலையில், அவளை ஜனனி தான் கடத்தி வைத்திருக்கிறாள் என்று குற்றம்சாட்டும் ஈஸ்வரியின் தந்தை, இனி அந்த ஜனனியை வீட்டுக்குள்ளேயே விடக் கூடாது எனவும், அவள் உயிரோடவோ, பிணமாவோ வந்தாலும் அவளை உள்ளே விடாதீங்க என்றும் விசாலாட்சியிடம் கூற, அதைக்கேட்டு கடுப்பான விசாலாட்சி, அவரை வெளுத்து வாங்குகிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய மருமகள்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : விஜயாவை வீடுதேடி வந்து மிரட்டும் சிந்தாமணி... ரேகாவின் வாக்குமூலத்தால் காத்திருக்கும் ட்விஸ்ட்

25
மருமகள்களுக்கு விசாலாட்சி போட்ட கண்டிஷன்

தர்ஷினி மட்டும் இந்த வீட்டுக்கு வரட்டும், உடனே என்னுடைய நாலு மருமகள்களையும் பிரிக்கப் போகிறேன் என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் விசாலாட்சி. நான்கு பேரும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி உள்ள அவர், இதை கண்டிப்பாக செயல்படுத்துவேன் என கூறி இருக்கிறார். விசாலாட்சியின் இந்த முடிவைக் கேட்டதும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் ஆடிப்போய் உள்ளனர். மறுபுறம் ஜனனி, தர்ஷினி உடன் காட்டுக்குள் உலா வருகிறார். அவர் தன்னிடம் இருக்கும் வீடியோவை எப்படியாவது சக்திக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

35
ஆதி குணசேகரனை நோட்டம் விட்ட கதிர்

தர்ஷினியை தேடிச் சென்ற கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் ஆகியோர் வீட்டுக்கு வர, அவர்களிடம் என்னப்பா எதாவது தெரிஞ்சதா என விசாலாட்சி கேட்கிறார். அதற்கு ஞானம், அண்ணன் வக்கீலை பார்க்குறேன்னு சொன்னதா இராவணன் சொன்னாருல்ல, அது உண்மைதானான்னு நாங்க பார்க்க போனோம். அண்ணன் அங்க தான் இருக்காரு. அவரு புது வக்கீலிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். புதுசா ஏதோ பிளான் பண்ணிட்டு இருந்தாங்க. போலீசும் தர்ஷினியை இன்னும் தேடிக்கிட்டு தான் இருக்கு என ஞானம் சொல்கிறார்.

45
சாமி ஆடும் ரேணுகாவின் அம்மா

இதையடுத்து பேசும் நந்தினி, அப்போ வரிஞ்சு கட்டிட்டு உங்க அண்ணனை தான் பார்க்க போனீங்களா என கேட்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ரேணுகாவின் அம்மாவிற்கு திடீரென சாமி வருகிறது. அவர் உடம்பில் காளி வந்திருப்பதாக விசாலாட்சி சொல்ல, உங்களுக்கு என்ன தெரியணும் என ரேணுகாவின் அம்மா கேட்கிறார். அதற்கு விசாலாட்சி, என் பேத்தி தர்ஷினியை காணவில்லை. அவளை கண்டுபிடிச்சு கொடு என கேட்கிறார். அப்போது இராவணன் அங்கு வர, அவரைப் பார்த்தபடி, எல்லா உண்மையையும் சொல்லவா என கேட்கிறார் ரேணுகாவின் அம்மா.

55
சிக்குவாரா இராவணன்?

அவரைப் பார்த்ததும் மிரண்டு போகிறார் இராவணன். மனிதர்களை ஈஸியாக ஏமாற்றிய இராவணன், சாமியிடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இராவணன் தான் தர்ஷினியை கடத்தினார் என்கிற உண்மையை சாமியாடும் ரேணுகாவின் அம்மா எல்லாரிடமும் சொல்வாரா? இல்லையா? ஜனனி தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை சக்திக்கு அனுப்பிவிட்டாரா? போலீசார் ஜனனியை பிடித்தார்களா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் தான் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories