ரோகிணியின் கழுத்தை நெரித்த மனோஜ்.... பூதாகரமாக வெடித்த சொத்து பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 29, 2025, 09:06 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்து பிரச்சனை தற்போது வெடித்துள்ளது. மனோஜ் தனக்கான சொத்தை பிரித்து தந்துவிடுமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, அவர் தான் வாங்கிய 30 லட்சம் கடனுக்காக வீட்டை பிரிக்க முடிவெடுக்கிறார். கடன்காரர் வீட்டுக்கே வந்து பிரச்சனை பண்ணியதால், அவரிடம் பணத்தை கொடுக்காவிட்டால் வீட்டை எழுதித் தருவதாக உத்தரவாதம் அளித்து ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார் அண்ணாமலை. குறிப்பிட்ட தினத்திற்குள் காசு தராவிட்டால் வீட்டில் உள்ள ஒருவரை தூக்குவேன் என்றும் அந்த நபர் எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்காலம்.

24
சொத்தை பிரிக்க சொல்லும் மனோஜ்

இதையடுத்து மனோஜ் உடன் சண்டை போடும் முத்து, அடங்கமாட்டியாடா நீ, உன்னுடைய பேராசைக்காக கடன் வாங்குவ, அதற்கு அப்பா பொறுப்பேத்துக்கனுமா என கேட்கிறார். இவனை முதலில் வீட்டை விட்டே வெளிய அனுப்பனும் என முத்து சொல்ல, போதும் நிறுத்துடா, பிசினஸில் இதெல்லாம் நடக்க தான செய்யும், எனக்காக யாரும் கடனெல்லாம் அடைக்க வேண்டும். என்னோடத என்கிட்ட கொடுங்க, நானே அடைச்சிக்கிறேன். உனக்கானத கொடுக்கனுமா என ரவி கேட்க, சொத்தை பிரிச்சு எனக்கான பங்கை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என மனோஜ் கேட்டதும் அனைவரும் அதிர்ந்துபோகிறார்கள்.

34
மனோஜை எதிர்க்கும் விஜயா

எனக்கு இந்த சொத்தில் உரிமை இருக்கு அதனால் கேக்குறேன் என மனோஜ் சொன்னதும், கோபத்தில் அவரின் சட்டையை பிடிக்கிறார் முத்து. அவர்களை பிரித்துவிடும் விஜயா, அருகில் இருந்த ரோகிணியை திட்டுகிறார். உன்னால் தான் இத்தனை பிரச்சனையும் வந்தது. பணக்கார வீட்டு பொண்ணுனு சொல்லி ஏமாத்துன, நீ வாங்கிக் கொடுத்த ஆர்டரினால் தான் என்னோட பிள்ளைக்கு இன்னைக்கு இந்த நிலைமை என திட்டுகிறார். பின்னர் மனோஜ், விஜயாவிடம் அப்பாகிட்ட சொல்லி சொத்தை பிரிக்க சொல்லுமாறு கேட்க, அதற்கு விஜயா, அதெல்லாம் முடியாது. நான் உயிரோட இருக்குற வரைக்கும் சொத்தை கூறுபோட விடமாட்டேன்.

44
அடிவாங்கிய கிரிஷ்

பின்னர் கோபத்தில் ரூமுக்குள் செல்லும் மனோஜ், பெட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிரிஷை அடிக்கிறார். இதைப்பார்த்த ரோகிணி எதுக்கு இப்போ கிரிஷை சத்தம்போடுற என கேட்கையில் ரோகிணிக்குள் கல்யாணியின் ஆவி வந்துவிட்டதாக நினைத்து, அவளது கழுத்தை நெரிக்கிறார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரோகிணி ஏன் மனோஜ் என்னோட கழுத்தை நெரிக்குற என கேட்டதும், ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இதையடுத்து வெளியே சென்று மீனாவிடம் மனோஜ் அடித்த விஷயத்தை சொல்கிறான் கிரிஷ். இதன் பின்னர் என்ன ஆனது? மனோஜுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்தாரா அண்ணாமலை? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories