Karthigai Deepam Today Dec 29th Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் நாளைய எபிசோடிற்கான புரோமோவில் கோயில் நகையை சந்திரகலா திருடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியலில் நாளைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஊர் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் கோயில் நகையை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பு சாமுண்டீஸ்வரிக்கு இருக்கு. இந்த நிலையில் தான் ஊர் பெரியவர்கள் வந்து உங்களது வீட்டில் இருக்கும் கோயில் நகைகளை அம்மனுக்கு சாற்றி முதல் மரியாதையை உங்களுக்கு அளிக்கலாம் என்று நினைக்கிறோம் என்று கூறுகின்றனர்.
25
Karthik Deepa Serial Review Tamil
ஆனால், சந்திரகலா அக்காவிற்கு முதல் மரியாதை கிடைக்க கூடாது, தனது கணவருக்கு தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று கூறி அதற்கான திட்டத்தில் ஈடுபடுகிறார். இதில் அக்கா வீட்டிலிருக்கும் நகையை போட்டோ எடுத்து அதே மாதிரி டூப்ளிகேட் நகையை செய்ய சொன்னார். அதை அவரது கணவர் மூலமாக செய்ய வைத்து டூப்ளிகேட் நகைகளை கொண்டு வந்து அக்கா வீட்டில் வைத்துவிட்டு, ஒரிஜினல் நகைகளை எடுத்துச் சென்றார்.
35
Karthigai Deepam Serial Kidnapping Scenes
பின்னர் ஊர் பெரியவர்கள் வந்து கோயில் நகைகளை எடுத்துச் சென்று அம்மனுக்கு சாற்றினர். ஆனால், அது ஒரிஜினல் நகை போன்று இல்லை என்று கூறி சிவனாண்டி பிரச்சனையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஆசாரியை வர வழைத்து நகையை பரிசோதனை செய்தனர். அதில் ஒரிஜினல் நகை இல்லை என்று தெரிவந்தது. இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
45
Karthigai Deepam Serial Fans Criticism
அதோடு புரோமோ வீடியோ முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை முழு எபிசோடையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக நகையை திருடியதாக சாமுண்டீஸ்வரி மீது குற்றம் சாட்டப்படும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், சந்திரகலா, கார்த்திக் தான் நகையை எடுத்து சென்றதாக சொல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. தனது அத்தையை காப்பாற்றுவாரா? என்ன செய்ய போகிறார் கார்த்திக் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
55
Karthigai Deepam Serial Fans Criticism
இந்த புரோமோவை ரசிகர்கள் கலாய்த்தும், விமர்சித்தும் வருகின்றனர். இதற்கு முன்னதாக இது போன்று பல காட்சிகள் கார்த்திகை தீபம் சீரியலில் ஒளிபரப்பானது. சாமி விக்ரகத்தை கடத்தியது, கலசத்தை திருடியது இப்படியே கார்த்திகை தீபம் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இப்போது சுவாமி நகையை கடத்தியுள்ளனர். இதை வைத்து நெட்டிசன்களும் சரி, ரசிகர்களும் சரி சகட்டுமேனிக்கு சீரியலை கலாய்த்து வருகின்றனர். உங்களுக்கு வேற கதையே இல்லையாடா ஏன்டா சீரியல கேவல படுத்துறீங்க, ஆள கடத்துவது பொருளை கடத்துவது இதைத் தவிர வேறு கதையே கிடையாதா, செம்பருத்தி சீரியல் சூப்பர் கார்த்திகை தீபம் சீரியல் வேஸ்ட் பார்க்கவே பிடிக்கில, கோயில் பிரச்சினை கொஞ்சம் தள்ளி வைங்க எப்போதும் அதுவே வைத்தால் சுவரசியமாக இருக்காது. கார்த்திக் ரேவதி வைத்து கதை எடுங்க என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர்.