நாடகமா? தங்கச்சி, மகள் மீது உள்ள பாசமா? போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடோடி வந்த முத்துவேல், சக்திவேல்! Pandian Stores 2 ட்விஸ்ட்!

Published : Dec 28, 2025, 05:03 PM IST

Pandian Stores 2 Serial Dec 29 to Jan 3d This Week Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்காக புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Pandian Stores 2 Serial This Week Promo Muthuvel Sakthivel at Police Station

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தங்கமயிலின் அம்மா பாக்கியம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மீனாவைத் தவிர ஒட்டு மொத்த குடும்பத்தினர் பெயரையும் பாக்கியம் குறிப்பிட்டு கூறினார். இதைத் தொடர்ந்து செந்தில், அரசி உள்பட எல்லோருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பாக்கியம் இவர்கள் எல்லோருமே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.

24
Pandian Stores 2 Serial This Week Promo

இதற்கு செந்தில் மற்றும் சரவணன் ஆத்திரமடைய பாண்டியன் மட்டும் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் தான் இந்த வாரத்திற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதாவது டிசமப்ர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதில், கோமதி, அரசி மற்றும் ராஜீ ஆகியோர் சோகத்தில் இருக்கும் போது அவரது அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். தனது அப்பாவை பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து ராஜீ அழுகிறார். மகளின் அழுகையை பார்த்து முத்துவேலும் அழுகிறார். அழாத ராஜீ எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராஜீக்கு சமாதானம் செய்கிறார்.

34
Muthuvel Sakthivel at Police Station

சக்திவேலோ கோமதியை பார்த்து அழுகிறார். அண்ணே என்று கோமதி அழ அவரது கையை பிடித்து சக்திவேல் அழுகிறார். இதையெல்லாம் பாண்டியன் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர்கள் யாரும் எந்த தப்பும் செய்திருக்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது எதற்கு ஸ்டேஷன் வரையில் கொண்டு வர வேண்டும் என்றார் சக்திவேல்.

அதற்கு அவர்களது மருமகள் தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்தது பாக்கியம். அப்படியிருக்கும் போது எப்படி தங்கமயில் புகார் கொடுத்திருக்க முடியும். Dowry Domestic Violenceல் பெரிய விஷயம். என்னால், ஒன்றும் செய்ய முடியாது என்று டிஜிபி கூறினார். அதோடு புரோமோ வீடியோ முடிகிறது.

44
Gomathi and Muthuvel

ஒரு கல்யாணத்தில் நின்ற குடும்பம் இப்போது தங்கமயில் பிரச்சனையால் மீண்டும் ஒன்று சேர்வாரக்ளா? அல்லது மீண்டும் பகையான கூடம்பமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்னதான் பகையான குடும்பமாக இருந்தாலும் ஒருபுறம் தங்கையும், மற்றொரு புறம் மகளும் இருக்கின்றனர். ஆதலால் இருவரையும் காப்பாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories