எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி உள்பட வீட்டு பெண்களை பழிவாங்க ஆதி குணசேகரன் பிளான் போடும் நிலையில், அதை ஞானம் தடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருந்த ஃபுட் டிரக் பிசினஸுக்கு கடைசி நேரத்தில் தடங்கல் ஏற்பட, அதையெல்லாம் மீறி பிசினஸை தொடங்குவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார் ஜனனி. அப்போது அவரை தடுத்து நிறுத்தும் விசாலாட்சி, சாமியிடம் கேட்டு எந்த முடிவையும் எடுக்கலாம் என சொல்கிறார். இதையடுத்து வீட்டில் உள்ள மீனாட்சி தாயின் போட்டோ முன்பு சீட்டை எழுதி போட்டு அதில் ஒன்றை எடுக்கிறார் ஜனனி. அதில் ஒரு சீட்டில் பிசினஸ் தொடங்கலாம் என்றும், மற்றொன்றில் பிசினஸ் திறப்பு விழாவை தள்ளிவைக்கலாம் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஜனனிக்கு கிடைத்த கிரீன் சிக்னல்
இதையடுத்து குலுக்கி போட்டு அதில் ஒரு சீட்டை ஜனனி எடுத்துப் பார்க்கையில் அதில் பிசினஸை தொடங்கலாம் என இருக்கிறது. மீனாட்சியே உத்தரவு கொடுத்துவிட்டதால் வண்டியை எடுத்துக் கொண்டு பெண்களுடன் ஸ்பாட்டுக்கு கிளம்பி செல்கிறார் ஜனனி. தமிழ் சோறு ஃபுட் டிரக் எண்ட்ரி கொடுப்பதை பார்த்ததும் அங்கிருந்த ரெளடிகள் அதை தடுக்க வருகிறார்கள். அவர்களிடம் பேசும் சக்தி, இந்த இடத்தோட ஓனரை வரச் சொல்லுங்க அவரிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என கூற, அவர்கள் அதெல்லாம் இங்க உங்க கடையை திறக்க கூடாது என சொல்லி பிரச்சனை செய்கிறார்கள்.
34
சண்டைபோடும் ஞானம் - குணசேகரன்
மறுபுறம் சிறுமலையில் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன், அங்கிருந்தபடியே ஜனனி மற்றும் வீட்டு பெண்களை தீர்த்துக்கட்ட பிளான் போடுவதோடு, ரெளடிகளையும் அனுப்புகிறார். இதையெல்லாம் பார்க்கும் ஞானம், வேண்டாம் அண்ணேன் என சொல்லி தடுக்கிறார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன ஆதி குணசேகரன், என்னடா ஞானம், பொண்டாட்டி பாசம் தடுக்குதோ என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணேன் என ஞானம் சமாளித்தாலும், அவர்மீது நம்பிக்கை இல்லாததால், நீ இங்க இருக்க வேண்டாம் கிளம்பி போடா என சொல்கிறார் குணசேகரன். கதிரும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்.
இதன்பின்னர் என்ன ஆனது? ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் ஜனனியை தீர்த்துக் கட்டினார்களா? ரெளடிகளின் அடாவடித்தனத்தை மீறி தமிழ் சோறு பிசினஸை தொடங்கினாரா ஜனனி? ஞானம் எடுக்கப்போகும் முடிவு என்ன? தமிழ் சோறு ஃபுட் டிரக் பிசினஸ் வெற்றிகரமாக தொடங்கப்படுமா? இந்த யுத்தத்தில் வெல்லப்போவது ஜனனியா?ஆதி குணசேகரனா? தலைமறைவாக உள்ள ஆதி குணசேகரனையும், கதிரையும் போலீஸ் கைது செய்ததா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.