
எப்போது கோமதி மற்றும் பாண்டியன் திருமணம் நடந்ததோ அப்போது முதல் பாண்டியன் குடும்பத்தினருக்கும், முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்தினருக்கும் இடையில் பகை இருந்து கொண்டே வருகிறது. தங்களது ஒரே ஒரு தங்கச்சியை பாண்டியன் திருமணம் செய்து கொண்டதை முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை வைத்து தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலே தொடங்கியது. ஆரம்பம் முதலே ரெண்டு குடும்பத்திற்கும் பகை. அதன் பிறகு முத்துவேல், சக்திவேல் குடும்பத்தினர் பாண்டியன் குடும்பத்தோடு பேசிக் கொள்ளவில்லை. எப்படி பழி வாங்க வேண்டும் என்று மட்டுமே சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் யோசித்து கொண்டே இருக்கின்றனர்,
இதற்காக சக்திவேலின் மகன் குமரவேல், அரசியை காதலிப்பது போன்று நடித்து அவரை ஏமாற்றினார். அதன் பிறகு கோமதி வீட்டிலேயே வளர்ந்து வந்த பழனிவேலுவை அவருக்கு கடை வைத்து கொடுத்து பாண்டியனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக சொல்லி அவரிடமிருந்து பிரித்தனர். கடைசியாக தங்கமயில் மற்றும் சரவணன் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சக்திவேல், பாக்கியத்தை போலீஸ் ஸ்டெஷனுக்கு சென்று வரதட்சணை கொடுமையில் புகார் கொடுக்க சொன்னார். அப்போது கூட சக்திவேல் மற்றும் பாண்டியனுக்கும் இடையில் அடிதடி சண்டை ஏற்பட்டது.
மேலும், இது தங்கமயில் சரவணன் பிரச்சனை என்று இல்லாமல் சக்திவேல் மற்றும் பாண்டியன் குடும்ப சண்டையாக மாறியது. இப்போது பாக்கியமும் பாண்டியன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் பாண்டியன், சரவணன், செந்தில், கதிர், கோமதி, குழலி, ராஜேஸ்வரி மற்றும் அரசி என்று அனைவர் மீதும் வரதசட்ணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கடையிலிருந்து பாண்டியன், சரவணன் மற்றும் கதிர் ஆகியோரும், வீட்டிலிருந்து கோமதி, ராஜேஸ்வரி மற்றும் அரசி ஆகியோரும், ஆபிஸிலிருந்து செந்திலும் விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தனது மகள், பேத்திகள் போலீசாரால் அழைத்து செல்லப்படுவதை காந்திமதி பார்த்து தனது மகன்களிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு சக்திவேல், குமரவேல் மற்றும் முத்துவேல் ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர். இதில், கோமதி, அரசி மற்றும் ராஜீ ஆகியோர் சோகத்தில் இருக்கும் போது அவரது அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். தனது அப்பாவை பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து ராஜீ அழுகிறார். மகளின் அழுகையை பார்த்து முத்துவேலும் அழுகிறார். அழாத ராஜீ எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராஜீக்கு சமாதானம் செய்கிறார்.
சக்திவேலோ கோமதியை பார்த்து அழுகிறார். அண்ணே என்று கோமதி அழ அவரது கையை பிடித்து சக்திவேல் அழுகிறார். இதையெல்லாம் பாண்டியன் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர்கள் யாரும் எந்த தப்பும் செய்திருக்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது எதற்கு ஸ்டேஷன் வரையில் கொண்டு வர வேண்டும் என்றார் சக்திவேல். அதற்கு அவர்களது மருமகள் தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்தது பாக்கியம். அப்படியிருக்கும் போது எப்படி தங்கமயில் புகார் கொடுத்திருக்க முடியும்.
Dowry Domestic Violenceல் பெரிய விஷயம். என்னால், ஒன்றும் செய்ய முடியாது என்று டிஜிபி கூறினார். அதோடு புரோமோ வீடியோ முடிகிறது. ஒரு கல்யாணத்தில் நின்ற குடும்பம் இப்போது தங்கமயில் பிரச்சனையால் மீண்டும் ஒன்று சேர்வார்களா? அல்லது மீண்டும் பகையான கூடம்பமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்னதான் பகையான குடும்பமாக இருந்தாலும் ஒருபுறம் தங்கையும், மற்றொரு புறம் மகளும் இருக்கின்றனர். ஆதலால் இருவரையும் காப்பாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதில் மீனா மீது புகார் கொடுக்காத நிலையில் அவரது ரியாக்ஷன் என்னவாக இருக்கும். ஏற்கனவே தங்கமயில் வீட்டிற்கு மீனா சென்றது பிடிக்காத செந்தில் அவருடன் சண்டை போட்டார். இந்த நிலையில் இப்போது செந்தில் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த நிலையில் மீனாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். தங்கமயிலுக்கு எதிரான நகை மேட்டரை வெளிப்படுத்துவாரா? இப்படி பல கேள்விகளுடன் இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.