Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தோழிகள் பரணி வாயால் சண்முகம் தான் புருஷன் என்பதை சொல்ல வைக்க பிளான் போட்டனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Mirchi senthil
அதாவது, பாட்டு போட்டி நடத்த சண்முகமும் அவனது தங்கைகளும் ஒரு டீமாக பங்கேற்க, பரணியும் அவளது தோழிகளும் இன்னொரு டீமாக பங்கேற்கின்றனர். இவர்களுக்கிடையே பாட்டு போட்டி நடந்து முடிகிறது. அடுத்து ஷண்முகம் ஒரு கட்டிலை போட்டு அதில் படுத்து கொள்ள, இதை பார்த்த தோழிகள் வேலைக்காரன் ஏன் இங்க தூங்குறான்? இதெல்லாம் பார்க்க நல்லாவே இல்லை. அவன உடனே வெளியே அனுப்பு, அவன் வீட்டுக்கு போகட்டும் என சொல்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
zee tamil Anna serial
அதன் பிறகு பரணி, நீ உன் வீட்டுக்கு போ என்று சண்முகத்திடம் சத்தம் போட, போனு சொன்னா எங்க போறது என்று கேட்க, யாருக்கும் தெரியாமல் நீ என் ரூமுக்குள் வந்து படுத்துக்க என்று சொல்கிறாள், சண்முகமும் அதேபோல் ரூமுக்குள் சென்று விட பரணி சத்தம் போட கூடாது, இன்னும் 84 நாள் தான் என்று சொல்ல இவன் சரிங்க பொண்டாட்டி என்று படுத்து கொள்கிறான்.