தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா திரும்பி வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஆபிசில் ஸ்னேகா, தீபாவை இது நம்ம ஆபிஸ், நம்ம தான் சுத்தமா வச்சுக்கணும் என்று சொல்லி கிளீன் செய்ய சொல்கிறாள்.
24
Karthigai deepam serial
தீபாவும் ஆபிஸை கிளீன் செய்து கொண்டே, இது நான் பாட வேண்டிய இடம் என நினைத்து தான் பாட்டு பாட, அதை கார்த்திக் பார்த்து பாராட்டுவது போல நினைத்து கொள்கிறாள். அடுத்து ஆபிஸ் வரும் கார்த்திக் வேலை செய்பவர்கள் விவரங்கள் அனைத்தையும் வாங்கி தீபா தனது பக்கத்திலேயே இருந்து வேலை செய்வது போல செய்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அதோடு இளையராஜாவிடம் பல்லவி என்ற பெண்ணுக்கு அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக தானே நாம் இந்த கம்பெனியை வாங்கினோம் என்று சொல்கிறான். மேலும் லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள்.
44
Karthigai deepam serial Today episode
என்னை பிடிக்க என்னைய வச்சியே பிளான் போடுறாங்க என தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.