“முதல் கணவர் நல்ல மனிதர் தான்.. ஆனால்..” விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய நடிகை ஸ்ரீதிகா..

Published : Aug 01, 2024, 04:11 PM IST

சமீபத்தில் நடிகர் ஆர்யனை 2-வது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதிகா தனது முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஓபனாக பேசி உள்ளார். 

PREV
18
“முதல் கணவர் நல்ல மனிதர் தான்.. ஆனால்..” விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய நடிகை ஸ்ரீதிகா..
Srithika

நாதஸ்வரம் சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீதிகா. இதை தொடர்ந்து மகராசி, குலதெய்வம் என பல சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்ரீதிகா. சமூக வலைதளங்களில் ஸ்ரீதிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

28
Srithika SSR Aaryann

இந்த நிலையில் தன்னுடன் மகராசி சீரியலில் இணைந்து நடித்த ஆரியனை ஸ்ரீதிகா சமீபத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. இந்த நிலையில் முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஸ்ரீதிகா பேசி உள்ளார். 

38
Srithika SSR Aaryann

இதுகுறித்து பேசிய ஸ்ரீதிகா “ நானும் சரி, ஆரியனும் சரி. முதல் திருமணத்தில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். எனது முதல் கணவர் நல்ல மனிதர் தான் அவரை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எங்கள் இருவருக்கும் திருமண வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் இருந்தன. 

48
Srithika SSR Aaryann

தொடக்கத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் போக போக பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டே தான் போனது. நாங்கள் சின்ன வயதில் திருமணம் செய்யவில்லை.

58
Srithika SSR Aaryann

30 வயதுக்கு மேல் வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் என் முதல் திருமணத்தில் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதனால் நாங்கள் இருவரும் பேசி பிரிய முடிவெடுத்தோம்.

 

68
Srithika SSR Aaryann

யாராக இருந்தாலும் அவர்களின் இயற்கையான குணத்தில் தான் இருக்க வேண்டும். நமக்காக அவர் மாற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதனால் அதான் அவரை விட்டு பிரிந்தேன்.

78
Srithika SSR Aaryann

அதே போல் ஆரியனும் அவரின் முதல் மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இருவருக்கும் திருமணத்திற்கு பின் ஒத்துப்போகவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 

 

88
Srithika SSR Aaryann

நானும் ஆரியனும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தோம். சீரியலில் ஒன்றாக நடித்ததால் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டோம். அப்போது பலரும் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்டனர். எங்களுக்கு அப்போது எதுவும் தோன்றவில்லை. பின்னர் எங்களின் பெற்றோரும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என்று கேட்டனர். அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து திருமணம் செய்து கொண்டோம்” என்று தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories