பாய்ஸ் வெசர்ஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் என இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் சக்கைபோடு போட்ட நிலையில் தொகுப்பாளினி அணு தொகுத்து வழங்கிய காபி வித் அணு என்ற நிகழ்ச்சி இவர் கைக்கு கிடைத்தது. அதில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய திவ்ய தர்ஷினி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் இவர் சந்திக்காத பிரபலங்களே இல்லை என்ற பெயரை பெற்றார்.