கார்த்திகை தீபம் சீரியல்: கார்த்தி மீதுள்ள காதலுக்காக கொலை செய்ய துடிக்கும் ரம்யா.. தந்தைக்கு தெரியவரும் உண்மை

Published : Aug 01, 2024, 02:55 PM IST

கார்த்தியின் மீது ரம்யா காதலுடன் இருப்பதும் அதற்கு தடையாக இருக்கும் தீபாவை அவர் கொல்ல துடிக்கும் விஷயமும் ரம்யாவின் தந்தைக்கு தெரிய வருகிறது.

PREV
14
கார்த்திகை தீபம் சீரியல்: கார்த்தி மீதுள்ள காதலுக்காக கொலை செய்ய துடிக்கும் ரம்யா.. தந்தைக்கு தெரியவரும் உண்மை
Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியிடம் வேலை கேட்டு கார்த்திக் வீட்டுக்கு சேகர் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சேகரை மடக்கிப் பிடித்த ரம்யா எதுக்கு இங்க வந்த? ஒழுங்கா இங்கிருந்து ஓடி போயிரு.. மாட்டுனா உனக்கு மட்டுமில்ல எனக்கும் தான் பிரச்சனை வரும் என்று வார்னிங் கொடுக்கிறாள். 

24
Zee Tamil Karthigai deepam serial

இந்த சமயம் பார்த்து, கார்த்திக் மாடியிலிருந்து கீழே இறங்கி வர, சேகர் நைசாக மறைந்து கொள்கிறான். அதன் பின்னர் வீட்டில் பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்குகிறது. அப்போது ஐயர் மந்திரத்தை சொல்லி பந்தக்கால் நடுவதற்காக குழி தோண்ட சொன்னதும் உறவினர்கள் சேர்ந்து குழி எடுக்கும் போது, அதில் பூரான் ஒன்று இருப்பதை பார்த்து ஷாக் ஆவதோடு, அது அபசகுணம் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். 

இதையும் படியுங்கள்... வயநாடு நிலச்சரிவு... பெரும் தொகையை நிவாரண நிதியாக வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி

34
Karthigai deepam serial Update

யாரோ ஒருவர் இந்த கல்யாணத்துக்கு எதிராக செயல்படுவதாக எச்சரிக்கை விடுக்கிறார். மேலும் இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாக கூறும் ஐயர், அதை செய்துவிடலாம் என்று சொல்கிறார். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட குடும்பத்தினர், பந்தக்கால் நட்டு முடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து கார்த்திக், தீபா இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். மறுபக்கம் ரம்யாவின் வீட்டில் அவளது தந்தை எதையோ தேடிக்கொண்டிருக்க, அப்போது ரம்யாவின் டைரி அவரது கையில் கிடைக்கிறது.

44
Karthigai deepam serial Today Episode

அதை அவர் பிரித்து படிக்கும் போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. கார்த்தியின் மீது ரம்யா காதலுடன் இருப்பதும் அதற்கு தடையாக இருக்கும் தீபாவை அவர் கொல்ல துடிப்பதும் ரம்யாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அவர், கார்த்திக்கு போன் போட்டு உடனடியாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்தடுத்த ட்விஸ்ட் பற்றி அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சரியா ஒரு வருஷம் ஆகிடுச்சு! மீண்டும் வீடு தேடி சென்று.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய KPY பாலா! வீடியோ!

Read more Photos on
click me!

Recommended Stories