வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்.! படித்தவுடன் மறையும் மெசேஜ்கள்.! ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, காப்பியும் பண்ண முடியாது.!

Published : Jun 06, 2026, 05:32 PM IST

Whatsapp View Once Message Feature: Whatsapp செயலியில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Whatsapp View Once Message Feature

உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் தனது பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே படித்துப் பார்க்கக்கூடிய வியூ ஒன்ஸ் குறுஞ்செய்தி (View Once Messages) வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தற்போது வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சாதாரண எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகளுக்கும் (Text Messages) நீட்டிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் அனுப்பும் மெசேஜ், ஒருமுறை படித்தவுடன் தானாக மறைந்து விடும்.

இதையும் படியுங்கள்: Train: ரயிலில் உங்கள் உடைமைகளை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ.!

26
Send as View Once - இது எவ்வாறு செயல்படும்?

பயனர்கள் ஒரு மெசேஜை டைப் செய்து விட்டு அதை அனுப்பும் Send பட்டனை நீண்ட நேரம் அழுத்தும் பொழுது (Long Press) ‘Send as View Once’ (ஒரு முறை பார்க்கும் வகையில் அனுப்பு) என்கிற கூடுதல் விருப்பம் திரையில் தோன்றும் என கூறப்படுகிறது. இவ்வாறு அனுப்பும் மெசேஜ்களை பெறுபவர், ஒருமுறை திறந்து பார்த்துவிட்டு மூடியவுடன் அந்த செய்தி சாட்டிங் பக்கத்திலிருந்து நிரந்தரமாக அழிந்து விடும். மீண்டும் அதை பார்க்க முடியாது.

இதையும் படியுங்கள்: EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!

36
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்

மேலும் வியூ ஒன்ஸ் மெசேஜ்களுக்கு பலத்த தனியுரிமை பாதுகாப்புகளும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மெசேஜ்களை பெறுபவர்களால் அதை நகலெடுக்கவோ(Copy), மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யவோ(Forward), பகிரவோ (Share) முடியாது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்கிரீன்ஷாட் எடுப்பதையோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வதையும் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளையும் Whatsapp ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் முக்கியமான தகவல்கள் தவறாக பகிரப்படுவது தவிர்க்கப்படும்.

இதையும் படியுங்கள்: Jobs: AI-யால் நெருங்க முடியாத துறைகள்.! அடுத்த 50 வருஷத்துக்கு 100% பாதுகாப்பான வேலைகள் பட்டியல்!

46
ஸ்பாய்லர் மெசேஜ்

இது மட்டுமல்லாமல் ‘ஸ்பாய்லர் மெசேஜ்’ என்கிற மற்றொரு அம்சமும் சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தில் நாம் அனுப்பும் குறிப்பிட்ட மெசேஜ் மங்கலாக (Blur) இருக்கும். அதன் மேல் தட்டினால் (Tap) மட்டுமே மெசேஜ் தெளிவாகத் தெரியும் வண்ணம் இந்த ஆப்ஷன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்பாய்லர் மெசேஜ்கள் மூலம் பாஸ்வர்ட்கள், ரகசிய எண்கள், சரிபார்ப்பு குறியீடுகள்(Verification Code) போன்ற முக்கியமான விவரங்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Indian Rupees: மீண்டுமொரு பண மதிப்பிழப்பு? அடியோடு மாறப்போகும் ரூபாய் நோட்டுகள்? புதிய கரன்சிக்கு மாறும் இந்தியா.!

56
இந்த அம்சம் எப்போது கண்டறியப்பட்டது?

Whatsapp செயலியின் புதிய அப்டேட்டுகளை கண்காணிக்கும் WABetaInfo என்கிற இணையதளத்தின் படி ஆண்ட்ராய்டுகளுக்கான வாட்ஸ் அப் பீட்டா பதிப்பில் இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் இன்னமும் மேம்பட இருப்பதால் பீட்டா சோதனை பயனர்களுக்கு வழங்கப்படவில்லை. இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்கிற அதிகாரப்பூர்வ காலக்கெடு எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

66
சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்னர் அறிமுகமாகும்

நாம் தினமும் பேசும் முக்கியமான மற்றும் ரகசியமான தகவல்களின் பதிவுகள் நிரந்தரமாக தங்கிவிடக் கூடாது என்பதற்காக Whatsapp இந்த முக்கிய வியூ ஒன்ஸ் மெசேஜஸ் அம்சத்தை கொண்டு வருகிறது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த பின்னர் முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கும், அதன்பின்னர் உலக அளவில் இருக்கும் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் இந்த புதிய வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories