WhatsApp Tips: வாட்ஸ்அப்பில் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை பலர் இன்னும் இயக்கவில்லை. இதனால் ஆண்டுகளாக சேமித்து வைத்த தகவல்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நண்பர்களுடன் உரையாடுவது முதல் அலுவலக ஆவணங்களைப் பகிர்வது வரை பல தேவைகளுக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வாட்ஸ்அப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களின் பாதுகாப்பு குறித்து பலர் போதிய கவனம் செலுத்துவதில்லை.
25
பாதுகாப்பு மிகவும் முக்கியம்
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் தகவல்களுக்கு இயல்பாகவே 'எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்' பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் தகவல்களை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும், பலர் தங்களது உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கூகுள் டிரைவ் அல்லது ஐகிளவுட் போன்ற சேமிப்பகங்களில் காப்பு பிரதியாக வைத்திருப்பார்கள். அந்த காப்பு பிரதிகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது முக்கியமான கேள்வியாகும்.
35
ஏன் இந்த பாதுகாப்பு அம்சம் அவசியம்?
உங்கள் கிளவுட் சேமிப்பகக் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த தனிப்பட்ட தகவல்கள் வெளியில் கசியக்கூடும். தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி தொடர்பான தகவல்கள் கூட தவறான நபர்களின் கைகளில் சிக்க வாய்ப்பு உள்ளது. போன்ற அபாயங்களைத் தவிர்க்க வாட்ஸ்அப் வழங்கும் 'எண்ட் டு எண்ட் என்கிரிப்டட் பேக்கப்' அம்சம் உதவுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு Chats என்பதைத் தேர்வு செய்து, Chat Backup என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் End-to-End Encrypted Backup என்பதை Enable செய்து, பாதுகாப்பான Password அல்லது Encryption Key ஒன்றை உருவாக்க வேண்டும். அதை மறக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
55
சில நிமிடங்கள் செலவிட்டால் போதும்
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. சில நிமிடங்களில் இயக்கக்கூடிய இந்த பாதுகாப்பு வசதி, எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களைத் தவிர்க்க உதவும். எனவே, வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் இந்த பாதுகாப்பு அமைப்பை ஒருமுறை சரிபார்த்து இயக்குவது நல்லது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.