இந்திய ஸ்மார்ட் அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் அர்பன் நிறுவனம் தனது புதிய 'ஆர்க் கோ 2 ஏஐ ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேண்ட்' மற்றும் 'க்யூ9ஐ ஏஐ ஏஎன்சி டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அர்பன் ஆர்க் கோ 2 ஃபிட்னஸ் பேண்ட், க்யூ9ஐ ஏஐ இயர்பட்ஸ் அறிமுகம்
இந்தியாவில் ஆடியோ & ஸ்மார்ட் அணியக்கூடிய சாதனங்கள் (Smart Wearables) சந்தையில் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான அர்பன் (Urban), தனது புதிய ஆர்க் கோ 2 ஏஐ ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேண்ட் (Urban Arc Go 2 AI Smart Fitness Band) மற்றும் க்யூ9ஐ ஏஐ ஏஎன்சி டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் (Urban Q9i AI ANC TWS Earbuds) ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பில் கவனம் செலுத்தும் ஆர்க் கோ 2 பேண்டில் ஏஐ-அடிப்படையிலான மீட்பு செயல்பாடு (AI Recovery Function), 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் 45 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், க்யூ9ஐ இயர்பட்ஸ் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு (AI Live Translation) மற்றும் ஸ்மார்ட்போனை தாங்கிப் பிடிக்கும் ஸ்மார்ட் ஸ்டாண்ட் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
24
விலை & கிடைக்கும் விவரங்கள் (Price & Availability)
அர்பன் ஆர்க் கோ 2 ஃபிட்னஸ் பேண்ட் விலை இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.5,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அர்பன் க்யூ9ஐ ஏ.என்.சி இயர்பட்ஸ் விலை இதன் விலை ரூ.4,999 ஆகும். இவ்விரு சாதனங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் & இந்தியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆர்க் கோ 2 பேண்ட் ஜெட் பிளாக் (Jet Black), இங்க் ப்ளூ (Ink Blue), ஸ்டோன் கிரே (Stone Grey), ஓஷன் (Ocean), ஆரஞ்சு (Orange) மற்றும் மெஜந்தா (Magenta) ஆகிய 6 கவர்ச்சிகரமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
34
அர்பன் ஆர்க் கோ 2 ஃபிட்னஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்
பயனர்களின் தினசரி உடற்பயிற்சி, தூக்கம், மன அழுத்தம் மற்றும் உடல் ஓய்வு நிலைகளை (Recovery Patterns) துல்லியமாகக் கண்காணிக்கிறது. இதிலுள்ள பிரத்யேக 'AI Recovery Function' பயனர்களின் உடல் நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆரோக்கிய ஆலோசனைகளை வழங்குகிறது. இதயத்துடிப்பு, தூக்க முறை மற்றும் ஸ்ட்ரெஸ் அளவைக் கணக்கிட நவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 110-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வழிகாட்டப்பட்ட தியானப் பயிற்சிகள் (Guided Meditation) உள்ளன.
பெண்கள் மாதவிடாய் சுழற்சி நினைவூட்டல் (Menstrual Cycle Tracker), நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை எச்சரிக்கும் செடண்டரி அலர்ட் (Sedentary Reminder), அழைப்புகள்-மெசேஜ் அலர்ட், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் சைகை மூலம் கேமராவை இயக்கும் கெஸ்ச்சர் கண்ட்ரோல் ஆகிய வசதி உண்டு. நெய்யப்பட்ட துணி பட்டையுடன் (Woven Fabric Strap) குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 45 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது IPX68 நீர் மற்றும் தூசு தடுப்புத் திறன் கொண்டது.
சத்தமில்லாத இசை அனுபவம் (ANC): வெளிப்புற இரைச்சலைக் குறைத்து தெளிவான அழைப்புகள் மற்றும் இசை அனுபவத்தை வழங்க ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 13மிமீ டைனமிக் டிரைவர்கள் (13mm Dynamic Drivers) ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் ஒலியை வெளிப்படுத்துகின்றன. இதன் சார்ஜிங் கேஸில் ஸ்மார்ட்போனை சாய்த்து வைக்கக்கூடிய ஸ்டாண்ட் அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோக்கள் பார்க்கும்போது அல்லது உடற்பயிற்சி பயிற்சிகளைப் பின்பற்றும் போது போனை கையில் பிடிக்காமல் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
'AI TransFun' செயலி மூலம் 50-க்கும் மேற்பட்ட உலகளாவிய மொழிகளில் நிகழ்நேர நேரடி மொழிபெயர்ப்பு (AI Live Translation) செய்யும் வசதி இதில் உள்ளது. ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) இணைப்பு மற்றும் தெளிவான குரல் அழைப்புகளுக்கு கிளியர் கால் எச்டி (Clear Call HD) மைக்ரோஃபோன் இடம்பெற்றுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 30 மணி நேர பிளேபேக் நேரமும் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.