செவ்வாயில் ஒளிந்திருக்கும் மாணிக்க புதையல்: விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை!

Published : Nov 10, 2026, 04:07 PM IST

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள 'சூப்பர்கேம்' கருவி, செவ்வாய் கிரகத்தின் வெளிர் நிறப் பாறைகளில் மாணிக்கக் கற்களுக்கு காரணமான 'குரோமியம் அடங்கிய கொரண்டம்' கனிமத்தின் ஒளிரும் தடயங்களைக் கண்டறிந்துள்ளது.

PREV
14
செவ்வாய் கிரகம் மாணிக்கம்

செவ்வாய் கிரகத்தின் புழுதி படர்ந்த மேற்பரப்பிற்கு அடியில் சிறிய மாணிக்க (Ruby) படிகங்கள் ஒளிந்திருக்க முடியுமா? சிவப்பு கிரகத்தின் கடுமையான புவியியல் கடந்த காலத்தைப் பற்றிய புதிய தடயங்களை வழங்கக்கூடிய ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை நாசாவின் (NASA) பெர்சவரன்ஸ் ரோவர் செய்துள்ளது.

செவ்வாயில் உள்ள வெளிர் நிறப் பாறைகளில் சிவப்பு நிற ஒளிரும் (Luminescence) தன்மையை ரோவர் கண்டறிந்துள்ளது. இது மாணிக்கக் கற்களை உள்ளடக்கிய கனிமக் குடும்பமான 'குரோமியம் கொண்ட கொரண்டம்' இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

24
சூப்பர்கேம் (SuperCam) கருவியின் முக்கியப் பங்கு

பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள மேம்பட்ட அறிவியல் கருவிகளில் ஒன்றான சூப்பர்கேம் (SuperCam) மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. லேசர் மற்றும் பல்வேறு ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி செவ்வாய் பாறைகளின் வேதியியல் மற்றும் கனிம அமைப்பை ஆய்வு செய்ய இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிர் நிற செவ்வாய் பாறையை ஆய்வு செய்யும்போது, சூப்பர்கேம் 692.7 மற்றும் 694.1 நானோமீட்டர் அலைநீளங்களில் வலுவான ஒளிரும் அலைவரிசைகளைக் கண்டறிந்தபோது ஆச்சரியமடைந்தனர். இந்த உமிழ்வுகள் 'கொரண்டம்' படிக அமைப்பிற்குள் இருக்கும் குரோமியம் அணுக்களுடன் தொடர்புடையவை ஆகும். பூமியில், குரோமியம் கொண்ட கொரண்டம் 'மாணிக்கம்' (Ruby) என்று அழைக்கப்படுகிறது.

சூப்பர்கேமின் இந்தத் துல்லியமான நேரடி ஒளிரும் அளவீட்டுத் திறன், இந்த அணுக்களிலிருந்து வெளிப்படும் தாமதமான ஒளியை ஆராய்ந்து கனிமத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.

34
இது பெரிய மாணிக்கக் கல்லா?

'ஜியோபிஸிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' (Geophysical Research Letters) இதழில் ஆன் ஒல்லிலா (Ann Ollila) தலைமையிலான குழு வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, இக்கருவியின் எதிர்பாராத திறன் செவ்வாயின் புவியியலை ஆராய எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குகிறது.

இருப்பினும், பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய மாணிக்கப் படிவுகளையோ அல்லது ஆபரணக் கல் தரத்திலான படிகங்களையோ கண்டுபிடித்துவிட்டது என்று இதற்குப் பொருளல்ல. செவ்வாயின் புவியியல் வரலாற்றைப் பற்றி வெளிப்படுத்தும் அறிவியல் பூர்வமான மதிப்பைக் கொண்ட நுண்ணிய கொரண்டம் படிகங்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளனர்.

44
உருவானது எப்படி?

கொரண்டம் கனிமம் பொதுவாக உருமாறிய பாறைச் சூழல்களுடன் தொடர்புடையது என்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமானது. பூமியைப் போலல்லாமல், செவ்வாய் கிரகத்தில் இத்தகைய புவியியல் செயல்முறைகளை இயக்கும் செயலில் உள்ள தட்டு புவிப்பொறைக் கட்டமைப்பு (Plate tectonics) இல்லை.

ஆனால், பண்டைய சிறுகோள் மற்றும் விண்கல் தாக்கங்கள் இதற்கான மாற்று விளக்கத்தை அளிக்கக்கூடும் என்று நம்புகின்றனர். சக்திவாய்ந்த தாக்கங்கள் அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கி, சுற்றியுள்ள பாறைகளில் நீண்ட காலத்திற்கு உள்ளூர் உருமாற்றத்தைத் தூண்டும். பெர்சவரன்ஸ் ரோவர் தற்போது ஜெஸீரோ க்ரேட்டர் (Jezero Crater) விளிம்பிற்கு அருகிலுள்ள ஒரு பண்டைய புவியியல் நிலப்பரப்பை ஆராய்ந்து வருகிறது. அங்கு இதுபோன்ற விண்கல் தாக்கங்களால் ஏற்பட்ட செயல்முறைகளின் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் இப்போது சூப்பர்கேமின் இந்த ஒளிரும் திறன்களைப் பயன்படுத்தி, கூடுதல் ஆதாரங்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். செவ்வாய் கிரகம் இன்னும் மாணிக்கக் புதையலை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த நுண்ணிய கனிமத் தடயங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிவப்பு கிரகம் எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்ற பெரிய வரலாற்றைக் கண்டறிய உதவுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories