வீபோ (Weibo) தளத்தில் டிப்ஸ்டர் 'Smart Pikachu' வெளியிட்ட பதிவின்படி (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது), அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஐந்து உயர் செயல்திறன் கொண்ட அகலமான டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்களில் ஒன்ப்ளஸ் 17-ம் ஒன்றாக இருக்கலாம். கேமிங் செய்யும்போது இந்த அகலமான திரை வடிவம் பரந்த பார்வைப் புலத்தை (Broader field of view) வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், டிஸ்ப்ளேவின் அளவு, ரெசல்யூஷன் அல்லது ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்தத் தகவலில் ஒன்ப்ளஸ் 17 என நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், நிறுவனத்தின் அடுத்த எண் கொண்ட ஃபிளாக்ஷிப் போன் குறித்து வெளியாகும் முதல் கசிவுத் தகவல் இதுவாகும். இதற்கு முன்னதாக, அக்டோபர் மாத இறுதியில் டிப்ஸ்டர் 'Digital Chat Station' வெளியிட்ட பதிவில், ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒன்ப்ளஸ் 15T மாடலின் தொடர்ச்சியைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக அகலமான திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வடிவமைப்பு சமீபத்திய ஒன்ப்ளஸ் ஃபிளாக்ஷிப் போன்களின் ஸ்கிரீன் விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். உதாரணமாக, ஒன்ப்ளஸ் 15 போன் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) கொண்ட 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேசமயத்தில், ஒன்ப்ளஸ் 16 இதே போன்ற அளவிலான ஸ்கிரீனைக் கொண்டிருந்தாலும், கூடுதலாக 185Hz என்ற உயர்ந்த புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுளது.