90°டைப்-சி கனெக்டர், வாட்டர் ரெசிஸ்டண்ட்: IPX4 ரேட்டிங்குடன் களமிறங்கிய ரேஸர் ஹேமர்ஹெட் V3 இயர்ஃபோன்!

Published : Nov 09, 2026, 04:31 PM IST

ரேஸர் ஹேமர்ஹெட் V3 குரோமா Type-C கேமிங் இயர்ஃபோன் ரூ. 7,000-ல் அறிமுகம்! ANC, RGB லைட்டிங் மற்றும் THX சரவுண்ட் சவுண்ட் அம்சங்களின் முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

PREV
14
ரேஸர் புதிய கேமிங் இயர்ஃபோன்

ரேஸர் (Razer) நிறுவனம் தனது புதிய 'ஹேமர்ஹெட் V3 குரோமா' (Hammerhead V3 Chroma) வயர்டு USB டைப்-சி கேமிங் இயர்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இயர்ஃபோனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் பிரத்யேகமாக மாற்றியமைக்கக்கூடிய குரோமா RGB லைட்டிங் (Chroma RGB Lighting) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 11mm டைனமிக் டிரைவர்களுடன் 6mm ட்வீட்டர்களும் (tweeters) இடம்பெற்றுள்ளன. நீர் எதிர்ப்பிற்கான IPX4 ரேட்டிங் மற்றும் ஓம்னிடைரக்ஷனல் மைக்ரோஃபோனுடன் கூடிய இன்-லைன் ரிமோட் வசதியும் இதில் உள்ளது.

24
விலை & விற்பனை விவரங்கள்

ரேஸர் ஹேமர்ஹெட் V3 குரோமா இயர்ஃபோனின் விலை - ரூ. 7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயர்டு இயர்ஃபோனை ரேஸர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெய்ல் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

34
முக்கிய சிறப்பம்சங்கள்

ஒலித்திறன் (Audio Drivers) - ரேஸர் ஹேமர்ஹெட் V3 குரோமா இயர்ஃபோனில் 11mm முதன்மை டைனமிக் டிரைவர் மற்றும் 6mm ட்வீட்டர் டிரைவர் வழங்கப்பட்டுள்ளன.

நாய்ஸ் கேன்சலேஷன் - இதில் ஃபீட்-ஃபார்வர்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

சரவுண்ட் சவுண்ட் - பிசியில் (PC), Razer Synapse 4 செயலி மூலம் 'THX 7.1 சரவுண்ட் சவுண்ட்' வசதியை இது ஆதரிக்கிறது. இதன் மூலம் கேமிங் விளையாடும் போது மிகத் துல்லியமான ஒலியை உணர்ந்து செயல்பட முடியும்.

44
தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப அளவீடுகள் - இதன் அதிர்வெண் வீச்சு (Frequency response) 20Hz முதல் 28kHz வரையிலும், மின் தடை (Impedance) 32 ஓம்ஸ் ஆகவும் உள்ளது. HATS அளவீட்டின்படி இதன் உணர்திறன் (Sensitivity) 106dBSPL மற்றும் அதிகபட்ச உள்ளீட்டு திறன் (Input power) 10mW ஆகும்.

வடிவமைப்பு & இணைப்பு - USB டைப்-சி கனெக்டருடன் கூடிய வயர்டு மாடலான இதன் கனெக்டர் 90-டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோஃபோன் வசதி - இன்-லைன் ரிமோட்டில் ஓம்னிடைரக்ஷனல் மைக்ரோஃபோன் (Omnidirectional Microphone) உள்ளதால் கேமிங் விளையாடும் போது ஆடியோ மற்றும் குரல் தொடர்புகளை எளிதாகக் கையாள முடியும். இதன் மைக்ரோஃபோன் சிக்னல்-டூ-நாய்ஸ் ரேஷியோ 63dB மற்றும் உணர்திறன் -26dB ஆகும்.

RGB லைட்டிங் & EQ - இதில் ரேஸரின் பிரத்யேக குரோமா RGB லைட்டிங் சிஸ்டம் உள்ளது. இது 16.8 மில்லியன் வண்ணங்களுடன் பின்புற ஒளியை (Backlighting) மாற்றியமைக்க அனுமதிக்கிறது. மேலும், 4 முன்மைவு செய்யப்பட்ட (Preset) ஈக்வலைசர் செட்டிங்குகள் மற்றும் 1 கஸ்டமைஸ் செய்யக்கூடிய EQ ப்ரொஃபைலும் உள்ளன.

பாதுகாப்பு & எடை - IPX4 நீர் எதிர்ப்புத் திறன் (Water resistance) கொண்ட இந்த இயர்ஃபோன் 1.2 மீட்டர் நீளமுள்ள கேபிளுடன் வருகிறது. இதன் மொத்த எடை 27.1 கிராம் மட்டுமே.

Read more Photos on
click me!

Recommended Stories