கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது இந்தியாவில் கடுமையான சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற ஆபத்தான தேடல்களைத் தவிர்ப்பது அவசியம். இல்லையென்றால் சிறையில் அடைக்கக்கூட நேரிடலாம்.
கூகுள் இன்று நமது கேள்விகளுக்கு பதில் சொல்லும் மிக வேகமான கருவியாக இருக்கிறது. ஆனால், தெரியாமல் சில விஷயங்களை தேடுவதால் சட்ட சிக்கல்கள் வரலாம் என்பதை பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் குறிப்பிட்ட சில முக்கிய சொற்களை கூகுளில் தேடுவது கூட கண்காணிப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வரக்கூடும். 2025-இல் கூட தவிர்க்க வேண்டிய சில தேடல்கள் இங்கு எச்சரிக்கையாக நினைவூட்டப்பட்டுள்ளன.
24
கூகுளில் தேடக்கூடாதவை
முதல் எச்சரிக்கை பைரசி தேடல்கள். இந்திய சட்டப்படி, திரைப்படம், வலைத் தொடர் அல்லது ஏதேனும் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாகப் பெறுவது கடுமையான குற்றம். “ஃப்ரீ மூவி டவுன்லோடு” போன்ற தேடல்கள் கூட சந்தேகமாக கருதப்படலாம். மூன்று ஆண்டுகள் வரை சிறையும், பெரிய அபராதமும் விதிக்கக்கூடிய இந்த சட்டத்தை கருத்தில் கொண்டு, இணையத்தில் சட்டவிரோத இணைப்புகளைத் தேடுவதைத் தவிர்ப்பது அவசியம்.
34
சட்டவிரோத தேடல்கள்
அடுத்து, பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான தேடல்களும் ஆபத்தானவை. வெடிகுண்டு, ஆயுத தயாரிப்பு அல்லது சட்டத்திற்கு விரோதமான மருத்துவ தகவல்கள் ஆராய்வது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு செல்லக்கூடும். இந்த வகை தேடல்கள் தேசிய பாதுகாப்பு கோணத்தில் மிக நுணுக்கமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், மருத்துவரின் அனுமதி இல்லாமல் மருத்துவ செயல்முறைகளை செய்ய முயல்வது சட்டத்திற்கும் உயிருக்கும் ஆபத்து என்பதால், இவ்வகைத் தகவல்கள் இணையத்தில் தேடுவதும் அபாயம் என்றே கருதப்படுகிறது.
மிகவும் கடுமையான சட்ட கண்காணிப்பு குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறை பாதிக்கப்பட்டவர்களின் அடையாள தேடல்கள் உள்ளது. POCSO சட்டத்தின்படி, குழந்தைகள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்களைத் தேடுதல், பார்ப்பது அல்லது பகிர்வது 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குச் சம்பந்தமாகும். மேலும், பாலியல் வன்முறை பாதிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி அல்லது அடையாள தகவலைத் தேடுவது குற்றமாகும். சட்டத்துக்கும் மனிதநேயத்துக்கும் எதிரானதாக இருப்பதால், இவ்வாறான தேடல்கள் உடனே கண்காணிக்கப்படுகின்றன.