ஆப்பிள் நிறுவனத்தின் AI தலைவராகப் பொறுப்பேற்கும் தமிழர்! யார் இந்த அமர் சுப்ரமணியா?

Published : Dec 02, 2025, 11:34 AM IST

Amar Subramanya ஆப்பிள் நிறுவனம் அமர் சுப்ரமணியாவை தனது புதிய AI துணைத் தலைவராக நியமித்துள்ளது. பெங்களூருவில் படித்த இவர், கூகுள் ஜெமினி திட்டத்தில் பணியாற்றியவர். ஆப்பிளின் இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் என்ன? முழு விவரம் உள்ளே.

PREV
15
Amar Subramanya யார் இந்த அமர் சுப்ரமணியா? சரிவில் இருக்கும் 'Siri'-யை மீட்பாரா?

ஆப்பிள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக இருப்பவர் அமர் சுப்ரமணியா (Amar Subramanya). கூகுளின் ஜெமினி (Gemini) திட்டத்திற்குத் தலைமை தாங்கிய அனுபவம் கொண்ட இவரை, ஆப்பிள் தனது AI பிரிவின் புதிய துணைத் தலைவராக (Vice President) நியமித்துள்ளது.

25
Amar Subramanya ஏன் இந்த திடீர் மாற்றம்?

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் சில சவால்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆப்பிளின் குரல் உதவியாளரான 'Siri', மற்ற நிறுவனங்களின் AI கருவிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதன் காரணமாக, இதுவரை AI பிரிவின் தலைவராக இருந்த ஜான் கியானாண்ட்ரியா (John Giannandrea) அப்பதவியிலிருந்து விலகுகிறார். 2026-ல் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள அவர், அதுவரை ஆலோசகராக மட்டுமே இருப்பார். இந்த இக்கட்டான சூழலில், ஆப்பிளின் AI கப்பலைச் செலுத்தும் பொறுப்பு அமர் சுப்ரமணியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

35
யார் இந்த அமர் சுப்ரமணியா?

தொழில்நுட்ப உலகில் அமர் சுப்ரமணியா ஒரு முக்கியமான நபர். இவருடைய பின்னணி மிகவும் வலுவானது:

• கல்வி: பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தார்.

• கூகுள் பயணம்: சுமார் 16 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றினார். குறிப்பாக, கூகுளின் 'ஜெமினி' (Gemini) திட்டத்தின் இன்ஜினியரிங் துணைத் தலைவராக இருந்து முக்கிய பங்காற்றினார்.

• மைக்ரோசாப்ட் அனுபவம்: ஆப்பிளில் சேருவதற்கு முன்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI பிரிவில் கார்ப்பரேட் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

45
ஆப்பிளின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் மென்பொருள் தலைவர் கிரேக் ஃபெடரிகி ஆகியோர் Siri-யின் புதிய அப்டேட்டைச் சோதித்துப் பார்த்தபோது, அது எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது நிறுவனத்திற்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இப்போது அமர் சுப்ரமணியா, ஆப்பிளின் மென்பொருள் தலைவர் கிரேக் ஃபெடரிகியின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுவார். ஆப்பிளின் ஃபவுண்டேஷன் மாடல்கள் (Foundation Models), மெஷின் லேர்னிங் ஆராய்ச்சி மற்றும் AI பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இவரின் முக்கியப் பணியாக இருக்கும்.

55
ஆப்பிளின் எதிர்பார்ப்பு என்ன?

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமர், ஆப்பிளின் AI சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories