BSNL வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று BSNL மீண்டும் ரூ.1 Freedom Plan-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிம் வாங்குபவர்களுக்கு 30 நாட்கள் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா இலவசம். முழு விவரம் இதோ.
BSNL ஜியோ, ஏர்டெல்லுக்கு செக்! வெறும் 1 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால் & டேட்டா! BSNL-ன் அதிரடி ஆஃபர் மீண்டும் வந்தது!
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போகும் வேளையில், பொதுத் துறை நிறுவனமான BSNL சாமானிய மக்களுக்காக ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களின் பேராதரவை அடுத்து, தனது பிரபலமான 'சுதந்திரத் திட்டம்' (Freedom Plan) ஆஃபரை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
26
வெறும் 1 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி!
நம்ப முடிகிறதா? வெறும் 1 ரூபாய் ரீசார்ஜில் ஒரு மாதத்திற்கான முழுச் சேவையையும் வழங்குகிறது BSNL. இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் இதோ:
• நாளொன்றுக்கு 2GB 4G டேட்டா.
• இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Calls).
• தினசரி 100 இலவச SMS.
• 30 நாட்கள் வேலிடிட்டி.
36
யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?
இந்த ஆஃபர் பழைய வாடிக்கையாளர்களுக்கு அல்ல. புதிதாக BSNL சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு (New Users) மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.
நீங்கள் புதிய BSNL சிம் கார்டை வெறும் 1 ரூபாய் கொடுத்து வாங்கினால், மேலே குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். இந்தச் சலுகை டிசம்பர் 1, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று நிறுவனம் தனது 'X' தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ஆஃபரை BSNL அறிமுகப்படுத்தியிருந்தது. அப்போது மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
56
மாணவர்களுக்கான பிரத்யேகத் திட்டம்
1 ரூபாய் திட்டத்தைத் தவிர, மாணவர்களுக்காக 'Learner's Plan' என்ற சிறப்புத் திட்டத்தையும் BSNL வைத்துள்ளது.
• விலை: ரூ. 251
• சலுகை: 28 நாட்களுக்கு 100GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள்.
• இந்தச் சலுகை டிசம்பர் 13, 2025 வரை மட்டுமே கிடைக்கும்.
66
நெட்வொர்க் வேகம் எப்படி?
BSNL தனது 4G சேவையைத் தற்போது தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. டெல்லி மற்றும் NCR பகுதிகளில் மட்டும் புதிதாக 10,000 4G டவர்களை அமைக்க டெண்டர் கோரியுள்ளது. எனவே, வரும் காலங்களில் இணைய வேகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, BSNL-ன் இந்த 1 ரூபாய் ஆஃபர் உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.