2027ல் உலகமே மாறப்போகுது.. மனிதர்களை மிஞ்சப்போகும் ரோபோக்கள்.. எலான் மஸ்க் போடும் புது பிளான் என்ன?

Published : Jan 24, 2026, 10:39 PM IST

Humanoid எலான் மஸ்க் அறிவிப்பு: டெஸ்லா ஆப்டிமஸ் ரோபோக்கள் 2027-ல் விற்பனைக்கு வரும். வீட்டு வேலை மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக இது செயல்படும்.

PREV
15
Humanoid

உலகப் புகழ்பெற்ற டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், தொழில்நுட்ப உலகில் மீண்டும் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகிவிட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) பேசிய அவர், மனிதர்களைப் போலவே செயல்படும் 'ஆப்டிமஸ்' (Optimus) ரோபோக்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்ற முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

25
2027-ல் பொதுமக்களுக்கு விற்பனை

எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் டெஸ்லாவின் 'ஆப்டிமஸ்' ரோபோக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மிகவும் சிக்கலான வேலைகளையும் செய்யும் திறனைப் பெறும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

35
வீட்டு வேலை முதல் தொழிற்சாலை வரை

இந்த ஆப்டிமஸ் ரோபோக்களிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லலாம். "உங்களுக்குப் பிடித்ததைச் செய்யச் சொல்லுங்கள்" (Ask it to do anything you'd like) என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, தொழிற்சாலைகளில் ஆபத்தான பணிகளை மேற்கொள்வது என அனைத்து இடங்களிலும் மனிதர்களுக்கு மாற்றாக இந்த ரோபோக்கள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை

2027-ல் இந்த ரோபோக்கள் விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்பு (High Safety) மற்றும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று மஸ்க் உறுதி அளித்துள்ளார். ரோபோக்கள் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்படுவதில் டெஸ்லா நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஆரம்பத்தில் இதன் விலை அதிகமாக இருந்தாலும், போகப்போக ஸ்மார்ட்போன்களைப் போல இதுவும் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

55
எதிர்காலத்தில் மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்

எதிர்காலத்தில் பூமியில் மனிதர்களை விட ரோபோக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார். "ஒரு கட்டத்தில் மனிதர்களின் எல்லா தேவைகளையும் ரோபோக்களே பூர்த்தி செய்யும் நிலை வரும். அப்போது மனிதர்களை விட ரோபோக்களே அதிகம் இருப்பார்கள்," என்று அவர் டாவோஸ் மாநாட்டில் வியப்பூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories