தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடோப் (Adobe) நிறுவனம் தனது அக்ரோபேட் (Acrobat) செயலியில் வியக்கவைக்கும் புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிடிஎஃப் (PDF) ஃபைல்களை எடிட் செய்வது மற்றும் படிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் எளிதாகப் போகிறது.
25
டைப் செய்தால் போதும்.. தானாக எடிட் ஆகும் PDF
வழக்கமாக ஒரு PDF ஃபைலில் உள்ள வார்த்தைகளை மாற்றுவதற்கோ அல்லது பக்கங்களை நீக்குவதற்கோ நாம் பல டூல்களைத் தேட வேண்டியிருக்கும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். அடோப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'Prompts' வசதி மூலம், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை டைப் செய்தால் மட்டும் போதும். உதாரணத்திற்கு, "ஐந்தாவது பக்கத்தை நீக்கு" அல்லது "இந்த வார்த்தையை மாற்று" என்று கட்டளையிட்டால், AI அதை நொடியில் செய்து முடிக்கும்.
35
போர் அடிக்கும் டாகுமெண்ட் இனி 'பாட்காஸ்ட்' ஆகும்
நீண்ட பக்கங்களைக் கொண்ட டாகுமெண்ட்களைப் படிக்க நேரமில்லையா? கவலையை விடுங்கள். அடோப் அக்ரோபேட்டின் புதிய 'Podcast-style summaries' வசதி, உங்கள் டாகுமெண்ட்டை ஒரு ஆடியோ பாட்காஸ்டாக மாற்றிக்கொடுக்கும். இரண்டு நபர்கள் உரையாடுவது போல உங்கள் ஃபைலில் உள்ள தகவல்களை இது சுருக்கமாகக் கூறும். படிப்பதற்குப் பதிலாக இனி நீங்கள் கேட்டே தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில், அடோப் 'Spaces' வசதியை மேம்படுத்தியுள்ளது. உங்களிடம் உள்ள தரவுகள், நிதி அறிக்கைகள் அல்லது குறிப்புகளை வைத்துக்கொண்டு, AI உதவியுடன் தானாகவே ஒரு அழகான பிரசன்டேஷனை (Presentation) உருவாக்க முடியும். கூகுள் நோட்புக் மற்றும் கேன்வா (Canva) ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த அம்சம் களமிறங்கியுள்ளது.
55
AI உதவியாளர் மற்றும் பகிர்வு வசதி
நீங்கள் ஒரு ஃபைலைப் பகிரும்போது, அதில் உள்ள முக்கியத் தகவல்களைத் தானாகவே மேற்கோள்களுடன் (Citations) சுருக்கிக் கொடுக்கும் வசதியும் இதில் உள்ளது. மேலும், உங்களுக்குத் தேவைக்கேற்ப 'ஆசிரியர்', 'ஆய்வாளர்' போன்ற பல்வேறு பாத்திரங்களில் AI உதவியாளரை (AI Assistant Roles) நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய அம்சங்கள் பயனர்களின் வேலைப்பளுவை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.