Amazon அமேசான் நிறுவனம் ஜனவரி 2026 கடைசி வாரத்தில் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது AWS மற்றும் HR துறைகளைப் பாதிக்கும். காரணம் AI தானா?
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கத் தயாராகி வருகிறது. வரும் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
25
30,000 பேரை குறிவைக்கும் அமேசான்
அமேசான் நிறுவனம் தனது நிர்வாக கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், மொத்தமாக 30,000 கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 14,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரத்தில் மேலும் 14,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இது அமேசான் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
35
எந்தெந்த துறைகள் பாதிப்பு?
இந்த மாபெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் அமேசானின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ஏடபிள்யூஎஸ் (AWS), மனிதவள மேம்பாட்டுத் துறை (HR), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் சில்லறை வர்த்தகப் பிரிவுகள் (Retail) கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் இன்னும் வெளியிடவில்லை.
அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி (Andy Jassy), இந்த பணிநீக்கத்திற்குப் பணம் ஒரு தடையல்ல என்றும், தேவையற்ற நிர்வாக அடுக்குகளைக் (Management layers) குறைப்பதே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார். முடிவுகளை விரைவாக எடுக்கவும், நிர்வாகத்தைச் சீர்திருத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி சில வேலைகளைத் தானியங்கிமயமாக்கியதும் இதற்கு ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம்.
55
கிடங்கு ஊழியர்களுக்குப் பாதிப்பில்லை
இந்த பணிநீக்கம் முக்கியமாக நிர்வாகப் பணியில் உள்ள 'வெள்ளை காலர்' (White-collar) ஊழியர்களை மட்டுமே குறிவைக்கிறது. கிடங்குகள் மற்றும் டெலிவரி பிரிவில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஒட்டுமொத்த அமேசான் ஊழியர்களின் எண்ணிக்கையில் இது வெறும் 2 சதவீதம் மட்டுமே என்றாலும், கார்ப்பரேட் பிரிவில் இது 10 சதவீதத்திற்கும் மேலாகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.