உலகையே ஆட்டிப்படைக்கும் வீடியோ தளமான யூடியூப் (YouTube), 2026-ம் ஆண்டிற்கான தனது பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் டிவி பார்க்கும் அனுபவத்தை மாற்றியமைக்கும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
25
உங்களுக்காக வீடியோ பேசும் 'AI இரட்டையர்' (AI Likeness)
இனி வீடியோ எடுக்க கேமரா முன் நிற்க வேண்டிய அவசியமில்லை! யூடியூப் ஷார்ட்ஸில் (Shorts) கிரியேட்டர்கள் தங்கள் உருவத்தை அப்படியே பிரதிபலிக்கும் 'AI அவதாரங்களை' (Digital Twins) உருவாக்கி வீடியோக்களை வெளியிடலாம். உடல்நிலை சரியில்லாத போதோ அல்லது அவசர நேரத்திலோ, இந்த AI குளோன்கள் உங்கள் குரலில், உங்களைப் போலவே பேசி வீடியோக்களை உருவாக்கும் என யூடியூப் தலைமை அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
35
ஷார்ட்ஸில் புகைப்படங்கள் மற்றும் கேமிங் வசதி
இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் போலவே, இனி யூடியூப் ஷார்ட்ஸ் ஃபீடிலும் புகைப்படங்களைப் (Image Posts) பகிரும் வசதி அறிமுகமாகிறது. அதுமட்டுமின்றி, வெறும் டெக்ஸ்ட் (Text Prompt) டைப் செய்தால் போதும், AI உதவியுடன் சிறிய வீடியோ கேம்களை உருவாக்கி விளையாடும் புதிய வசதியும் வரவுள்ளது. பெற்றோர்களின் கவலையைப் போக்க, ஷார்ட்ஸ் பார்ப்பதைக் கட்டுப்படுத்தும் 'டைமர்' (Timer) வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
யூடியூப் டிவியில் 'மல்டிவியூ' மற்றும் தனித் தனி பிளான்கள்
யூடியூப் டிவி (YouTube TV) செயலியில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது. இனி ஒரே திரையில் உங்களுக்குப் பிடித்த பல சேனல்களை ஒன்றாகப் பார்க்கும் 'மல்டிவியூ' (Multiview) வசதியை நீங்களே முழுமையாகத் தனிப்பயனாக்கலாம் (Customize). மேலும், ஒரே பேக்கேஜாக இல்லாமல் விளையாட்டு, செய்திகள், பொழுதுபோக்கு என 10-க்கும் மேற்பட்ட தனித்தனி சப்ஸ்கிரிப்ஷன் பிளான்களை (Genre-based Plans) அறிமுகப்படுத்த யூடியூப் திட்டமிட்டுள்ளது.
55
பழைய வீடியோக்களிலும் புதிய வருமானம்
கிரியேட்டர்களுக்குப் பணமழையைப் பொழியவும் புதிய வழி பிறந்துள்ளது. ஏற்கனவே பதிவேற்றிய பழைய வீடியோக்களில் உள்ள ஸ்பான்சர் விளம்பரங்களை நீக்கிவிட்டு, புதிய பிராண்ட் விளம்பரங்களைச் சேர்க்கும் வசதி வருகிறது. இதன் மூலம் பழைய வீடியோக்களிலிருந்தும் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும். அதேசமயம், போலி வீடியோக்களைத் (Deepfakes) தடுக்கவும், AI உள்ளடக்கத்தை லேபிள் செய்யவும் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.