Best phones under 10000: ரூ.10,000-க்குள் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. 5G, 120Hz டிஸ்ப்ளே, 50MP கேமரா, நீண்டகால அப்டேட் போன்ற அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் 4 மாடல்களை இங்கே பார்க்கலாம்.
ரூ.10,000-க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தேர்வுகள் மிகவும் குறைவாக இருந்தன. ஆனால் 2026-ல் நிலைமையே மாறிவிட்டது. இன்று இந்த விலையிலும் 5G இணைப்பு, 120Hz டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பிராசசர் மற்றும் 50MP கேமரா போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இருப்பினும், எந்த போன் உண்மையில் பணத்திற்கு மதிப்பு தருகிறது என்பதுதான் வாங்குபவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
25
போக்கோ எம்7
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது போக்கோ எம்7 (POCO M7 5G). Snapdragon 4 Gen 2 சிப்செட், 120Hz திரை மற்றும் 5 G ஆதரவு காரணமாக, தினசரி பயன்பாடு முதல் லேசான கேமிங் வரை சிறப்பாக செயல்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் அதிக செயல்திறன் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
35
மோட்டோ ஜி35
சூப்பரான ஆண்ட்ராய்டு அனுபவத்தை விரும்புபவர்களுக்கு மோட்டோ ஜி35 (Moto G35 5G) கவனிக்க வேண்டிய மாடலாகும். தேவையற்ற பயன்பாடுகள் இல்லாத மென்பொருள், முழு HD+ 120Hz திரை மற்றும் Dolby Atmos ஸ்பீக்கர்கள் ஆகியவை இதன் பலமாக உள்ளன. அதே நேரத்தில், Samsung Galaxy F06 5G தனது நம்பகமான One UI, Dimensity 6300 சிப்செட் மற்றும் நீண்டகால அப்டேட் ஆதரவால் குடும்ப பயனர்கள் மற்றும் முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
அதிக சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இன்பினிக்ஸ் ஹாட் 50 (Infinix Hot 50 5G)-ஐ பரிசீலிக்கலாம். 120Hz திரை, 128GB சேமிப்பு மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி காரணமாக தினசரி பயன்பாட்டில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. வீடியோக்கள் பார்ப்பது, சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது மற்றும் பல Apps-ஐ ஒரே நேரத்தில் இயக்குவது போன்ற பணிகளில் இது சிறப்பாக செயல்படுகிறது.
55
குறைந்த விலை போன்கள்
போன் வாங்கும் போது கேமரா அல்லது விலை மட்டும் பார்த்து முடிவு எடுக்காமல், செயலி, மென்பொருள் புதுப்பிப்பு, சேமிப்பு, பேட்டரி மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்தால், ரூ.10,000-க்குள் கூட பல ஆண்டுகள் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும். தற்போதைய விலை நிலவரத்தைப் பார்க்கும்போது, இந்த நான்கு மாதங்களும் 2026 ஜூன் மாத பணத்திற்கு சிறந்த மதிப்பு தரும் தேர்வுகளாக உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.