LPG Cylinder : நம்ம வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்குன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இது சும்மா ஒரு வண்ணத் தேர்வு இல்லீங்க, இதுக்குப் பின்னால பெரிய பாதுகாப்பு காரணங்களும்,அறிவியலும் இருக்கு.
எல்பிஜி சிலிண்டர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கறதுக்கு முக்கியமான காரணம், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுதான். சிவப்பு நிறம் என்பது உலகளவில் 'ஆபத்து' அல்லது 'எச்சரிக்கை' என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு. எல்பிஜி வாயு எளிதில் தீப்பற்றக்கூடியது. அதனால, இந்த சிவப்பு நிறம், சிலிண்டரைக் கையாளும் போதும், அதைப் பயன்படுத்தும் போதும் நாம ரொம்ப கவனமா இருக்கணும்னு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்குது. ஒருவேளை வாயு கசிவு அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்கள்ல, சிவப்பு நிறம் சிலிண்டரை சீக்கிரம் அடையாளம் கண்டு, தக்க நடவடிக்கை எடுக்க உதவும்.
23
சிவப்பு நிறத்தின் அறிவியல் ரகசியம்!
சிவப்பு நிறம் ஏன் ஆபத்து மற்றும் எச்சரிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கு. கண்ணுக்குத் தெரியும் ஒளிக் கற்றைகளில், சிவப்பு நிறம்தான் அதிக அலைநீளம் (Wavelength) கொண்டது. இதனால, சிவப்பு நிறம் தூரத்துல இருந்தும் தெளிவாகத் தெரியும். குறைந்த வெளிச்சம் உள்ள இடங்கள்லயோ அல்லது கூட்டமான பகுதிகள்லயோ கூட சிவப்பு நிற சிலிண்டரை எளிதா பார்க்க முடியும். இந்த சிறப்பான பார்வைத் திறன், பாதுகாப்புக்கு ரொம்ப அவசியம்.
எல்பிஜி சிலிண்டர்கள் மட்டும் இல்லாம, மற்ற வாயு சிலிண்டர்களும் வெவ்வேறு நிறங்களில் இருக்கு. ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட வாயுவையும், அதோட பயன்பாட்டையும் குறிக்கும்.
நீல நிற சிலிண்டர்கள்: இவை பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக, அதாவது ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் பயன்படுத்தப்படும். மானியம் இல்லாத எல்பிஜி இதில் நிரப்பப்படும்.
வெள்ளை நிற சிலிண்டர்கள்: இவை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வாயுவை சேமிக்கப் பயன்படுத்தப்படும்.
மஞ்சள் நிற சிலிண்டர்கள்: தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி அலகுகளில் தொழில்துறை பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிறக் குறியீடுகள், ஒவ்வொரு சிலிண்டரிலும் என்ன வாயு இருக்கு, அதை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்ள உதவுகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கும் இந்த நிற வேறுபாடு முக்கியம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.