IPHONE Offer
இந்தியாவில் பலரது நீண்ட நாள் ஆசை ஐபோன்கள் வாங்க வேண்டும் என்பதே. இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பது பெரும் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் 'நாமும் ஒருநாள் ஐபோன் வாங்க வேண்டும்' என்ற கனவில் நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிரடி சலுகையை அளிக்கின்றன.
Flipkart and Amazon
அதாவது அமேசானில் ஐபோன் 16 மாடலுக்கு 6% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால் ரூ.79,900க்கு விற்பனைக்கு அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.74,900க்கு வாங்கிக் கொள்ள முடியும் மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர ரூ.2.000 கேஷ் பேக் சலுகையும் உண்டு. ரூ.70,000 விலையில் இந்த போனை உங்களால் வாங்க முடியும்.
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இனி ராஜயோகம்; 'ஹை ஸ்பீடு' இன்டர்நெட்; 4ஜி இ-சிம் எப்போது?
iPhone 16 Diccount
ப்ளிப்கார்ட்டை பொறுத்தவரை ஐபோன் 16 மாடலுக்கு 12% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால் ரூ.79,900க்கு விற்பனைக்கு அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.69,900க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.
ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் மூலமும் கூடுதலாக விலை குறைப்பு செய்ய முடியும். இந்த தள்ளுபடி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் ஐபோன் 16 மாடலை ரூ.60,000க்குள் வாங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
Amazon, Flipkart Smartphone Offer
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என இரண்டு தள்ளுபடிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ப்ளிப்கார்ட் ஐபோன் 16 மாடலுக்கு கூடுதல் தள்ளுபடி அளிக்கிறது என்பது தெரியவருகிறது. ஆனால் நீங்கள் விரும்பினால் அமேசானிலும் வாங்கலாம். விலைகள் மற்றும் கிடைக்கும் தன்மை நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிறுவனங்களையும் நீங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், நீங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து ரூ.71,900க்கு ஐபோனை வாங்கலாம். மேலும் 'விஜய் சேல்ஸ்' விற்பனை தளத்திலும் ஐபோன் 16 மாடல் ரூ.73,490 விலையில் கிடைக்கிறது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்; ரீசார்ஜ் செய்தால் உடனே ரூ.50 கேஷ்பேக்; சூப்பர் சான்ஸ்!