உங்கள் சிம்மை ரீசார்ஜ் செய்யாவிட்டால், அது எத்தனை நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு சிம் கார்டின் வேலிடிட்டி பற்றி தெரியாது. இந்நிலையில், இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டையும் ஆக்டிவாக வைத்திருப்பதில் பிரச்சனை எழுகிறது.
சமீபத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சிம் கார்டு தொடர்பான சில விதிகளை வெளியிட்டுள்ளது. TRAI இன் புதிய விதிகள் மொபைல் பயனர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மொபைல் ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டாலும், உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ரீசார்ஜ் திட்டம் இல்லாமல் உங்கள் சிம் கார்டு பல மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
நீங்கள் ஜியோ சிம்மைப் பயன்படுத்தினால், ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்களுக்கு உங்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்கலாம். 90 நாட்களுக்குப் பிறகு, ரீ-ஆக்டிவேஷன் திட்டத்தில் ரீசாரஜ் செய்து உங்கள் எண்ணைச் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ரீசார்ஜ் திட்டம் முடிந்ததும், வரும் அழைப்புகளைப் பேசும் வசதி ஒரு மாதம், ஒரு வாரம் என பயனர்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. சிலருக்கு ஒரே நாளில் வரும் அழைப்புகளும் தடைபடுகின்றன. 90 நாட்களுக்கு ஜியோ நம்பர் ஆக்டிவாக இல்லை என்றால், அதன் பிறகு உங்கள் எண்ணை நிரந்தரமாக இழக்க நேரிடும். அது வேறொருவருக்கு மாற்றிக் கொடுக்கப்படும்.
நீங்கள் ஏர்டெல் சிம் கார்டைப் பயன்படுத்தினால், ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டை 60 நாட்களுக்கு மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும். 60 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் ரூ.45 மதிப்புள்ள வேலிடிட்டி திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
Vi சிம் கார்டு பயன்படுத்தினால், ரீசார்ஜ் திட்டம் இல்லாமல் உங்கள் சிம் கார்டு 90 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். அதற்குப் பிறகு, சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரூ.49 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் ரீசார்ஜ் இல்லாமலே இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். பிஎஸ்என்எல் சிம் கார்டைத்தான் ரீசார்ஜ் செய்யாமல் அதிக நாட்கள் ஆக்டிவாக வைத்திருக்க முடியும். 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, ரீசார்ஜ் திட்டம் முடிந்த பிறகும் உங்கள் எண் 180 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.