தீயாய் வேலை செய்து பெயிலில் எடுத்த விஜய் வழக்கறிஞர்கள்..! ஒரு முடிவோடு தான் இருக்காங்க

Published : Oct 01, 2025, 09:15 AM ISTUpdated : Oct 01, 2025, 08:48 PM IST

கரூர் தவெக கூட்ட நெரிசலை தொடர்ந்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தவெக வழக்கறிஞர்கள் அவரை ஜாமீனில் எடுத்துள்ளனர். 

PREV
15
தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் எதிர்பாராத விததமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழனந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

25
அவதூறு செய்தி

ஒரு பக்கம் விஜய்யை விமர்சித்தும், மற்றொரு பக்கம் காவல்துறையை மற்றும் திமுக அரசை குறை சொல்லியும், இந்த விபத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான் காரணம் பதிவிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துதுறை எச்சரித்திருந்தது. எச்சரித்தும் அவதூறு செய்தி பரப்பியதாக 30 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

35
பெலிக்ஸ் ஜெரால்டு கைது

இந்நிலையில், அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று காலை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

45
பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன்

இதனிடையே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்டை பிலிப்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நீலம் அமைப்பினர்தான். பத்திரிக்கையாளர் ஃபெலிக் ஜெரால்டு கைது செய்யப்பட்டவுடன் அவரை விடுவிக்க தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்துள்ளனர்.

55
தவெகவுக்கு புளியந்தோப்பு மோகன் மறுப்பு

இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நீலம் அமைப்பைச் சேர்ந்த புளியந்தோப்பு மோகன், “நானும் வழக்குரைஞர் ஜான்சன் அவர்களும் தான் பெலிக்ஸ் அவர்களுக்காக நீதிமன்ற நடுவரிடம் மனுத்தாக்கல் செய்து வழக்காடினோம். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அணியினர் எங்கள் வாதங்களை எல்லாம் முடித்துவிட்ட பிறகு நீதிமன்ற நடுவர் தீர்ப்புரை எழுதும்பொழுது வந்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  தவெக வழக்கறிஞர்களும்  பீலிக்ஸ் ஜெரால்டு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் எடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் திமுக அரசுக்கு எதிராக தவெகவினர் அதிரடி அரசியலை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் திமுகவை அலறவிட தவெகவினர் பல்வேறு வியூகங்கள் மற்றும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories